லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
தெலுங்கு திரையுலகில் சீனியர் நடிகரான மோகன் பாபுவின் மகன்களில் மூத்தவர் நடிகர் விஷ்ணு மஞ்சு. கடந்த வருடம் தெலுங்கு திரையுலக நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்டு தலைவராகவும் மாறினார். தற்போது தனது திரையுலக வரலாற்றிலேயே மிகப்பிரமாண்டமான பொருட்செலவில் எடுக்கப்பட்டு வரும் கண்ணப்பா என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் விஷ்ணு மஞ்சு. இந்த படத்தை அவரது தந்தை மோகன்பாபுவே தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து நியூசிலாந்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் சமீபத்தில் படப்பிடிப்பில் ட்ரோன்களை பயன்படுத்தி சில முக்கியமான காட்சிகளை படமாக்கி வந்தனர். அப்போது விஷ்ணு மஞ்சுவிற்கு அருகில் சென்று அவரது குளோசப் காட்சிகளை படமாக்க முயன்றபோது ட்ரோனின் இறக்கைகள் சுற்றியதில் விஷ்ணு மஞ்சுவின் புஜங்களில் அடிபட்டு காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் விஷ்ணு மஞ்சு. மருத்துவர்களின் கண்காணிப்பில் ஓரிரு நாட்கள் அவர் சிகிச்சையும் ஓய்வும் பெற வேண்டி இருக்கிறது என்பதால் படப்பிடிப்பு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.