Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிவகார்த்திகேயன் எனக்கு செய்த துரோகம் - இசையமைப்பாளர் இமான் பரபரப்பு குற்றச்சாட்டு

17 அக், 2023 - 15:09 IST
எழுத்தின் அளவு:
Sivakarthikeyans-betrayal-of-me---Music-composer-Iman-sensational-allegation

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இன்று நடிகர்கள் ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோரின் படங்களுக்கு பின் அதிகளவில் வசூலை தரும் நடிகராகவும் உருவெடுத்து வருகிறார். திரையுலகில் இவரது வளர்ச்சி அசாத்தியமானது. அதற்கு அவரின் கடின உழைப்பும் முக்கியம்.

இந்தச் சூழலில் சிவகார்த்திகேயன் எனக்கு துரோகம் செய்துவிட்டார் என இசையமைப்பாளர் டி.இமான் குற்றம் சாட்டி உள்ளார். சிவகார்த்திகேயன் சினிமாவிற்கு அறிமுகமான காலக்கட்டத்தில் அவரின் படங்களுக்கு தொடர்ச்சியாக இசையமைத்து வந்தவர் இமான். இவர்களின் கூட்டணியில் வெளியான ‛‛மனம் கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா, நம்ம வீட்டு பிள்ளை'' போன்ற படங்களின் பாடல்கள் சூப்பர் ஹிட்டாகின.

இந்நிலையில் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் இமான் கூறியிருப்பதாவது : சிவகார்த்திகேயன் கூட இனி இணைய வாய்ப்பே இல்லை. இந்த ஜென்மத்தில் அது நடக்காது. அவர் எனக்கு செய்த மிகப்பெரிய துரோகம் தான் காரணம். அது என்னவென்று என்னால் வெளியே சொல்ல முடியாது. அது தனிப்பட்ட விஷயம்.

ஒருவேளை அடுத்த ஜென்மத்தில் அவர் நடிகராகவும், நான் இசையமைப்பாளராகவும் பிறந்தால் இணைய வாய்ப்பு உள்ளது. இது நான் மிகவும் கவனமாக எடுத்த முடிவு. அவர் செய்த துரோகம் எனக்கு தாமதமாகத்தான் தெரிந்தது. இதுபற்றி அவரிடம் நேரடியாகவே கேட்டுவிட்டேன். அவர் கூறிய பதிலை என்னால் சொல்ல முடியாது”.

இவ்வாறு டி.இமான் கூறியுள்ளார்.

சிவகார்த்திகேயன் மீது இமான் கூறிய இந்த குற்றச்சாட்டு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் சமூகவலைதளத்தில் டிரெண்ட் ஆனது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
விடாமுயற்சியில் இணையும் பிரியா பவானி சங்கர்விடாமுயற்சியில் இணையும் பிரியா ... தேசிய விருது பெற்ற மணிகண்டன், மாதவன், அல்லு அர்ஜூன், ஆலியா பட், ராஜமவுலி உள்ளிட்ட திரைக்கலைஞர்கள் தேசிய விருது பெற்ற மணிகண்டன், மாதவன், ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in