Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தெறி ஹிந்தி ரீமேக்கில் இணைந்த கீர்த்தி சுரேஷ்!

24 செப், 2023 - 05:03 IST
எழுத்தின் அளவு:
Keerthy-Suresh-Joins-Theri-Hindi-Remake!


கடந்த 2016ம் ஆண்டில் அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன் நடித்து வெளிவந்த திரைப்படம் 'தெறி'. இந்த படத்தின் ஹிந்தி ரீமேக்கை அட்லீ மற்றும் ஹிந்தி தயாரிப்பாளர் முராத் கெதானி இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். பாலிவுட் நடிகர் வருண் தவான் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை கீ பட இயக்குனர் காளிஸ் இயக்குகிறார்.

ஏற்கனவே இதன் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் தொடங்கியுள்ளது. இப்படத்தில் வாமிகா கபி நாயகியாக நடித்து வருகிறார். மற்றொரு கதாநாயகியாக தமிழில் சமந்தா நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதன் படப்பிடிப்பிற்காக மும்பை சென்றுள்ள கீர்த்தி சுரேஷ், வருண் தவானுடன் ஆட்டோவில் பயணித்துள்ளார். இந்த வீடியோ வைரலாகியுள்ளது. இந்த படம் அடுத்த வருடம் 2024 மே 31ம் தேதி அன்று வெளியாகும் என கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
2 நாட்களில் ஐந்து மில்லியன் பார்வைகளை கடந்த திரிஷாவின் ‛தி ரோடு' டிரைலர்!2 நாட்களில் ஐந்து மில்லியன் ... விக்ரமின் மகாவீர் கர்ணன் விரைவில் துவக்கம் ; இயக்குனர் அறிவிப்பு விக்ரமின் மகாவீர் கர்ணன் விரைவில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)