தாய் கிழவி : சிங்கம் புலி நடிப்பை பாராட்டிய கமல் | தெலுங்கு, தமிழ் கலாசாரத்துடன் இணைந்திருக்கிறேன்! ஜான்வி கபூர் | போர் முழக்கம் : வடிவேலுவின் புதிய படம் | கமல் - ரஜினி இணையும் படம் குறித்து அனிருத் வெளியிட்ட அப்டேட்! | விஜய் சேதுபதியை இயக்கும் அஜித் பட இயக்குனர்! | போர் சூழல் : டாக்சிக் ரிலீஸ் ஜூன் 4ம் தேதிக்கு தள்ளி வைப்பு | ‛காற்றின் மொழி' இசையில்.... : ‛மெலோடி கிங்' வித்யாசாகர் பாடல்களை மறக்க முடியுமா? | பிளாஷ்பேக்: ராஜாஜி பாராட்டிய சிவாஜிகணேசன் | சிகரெட், மதுவை தொட்டதில்லை: சதீஷ் பெருமிதம் | ஆந்தாலஜி கதையில் உருவாகும் 'வவ்வல்ஸ்' |

சாமியார் நித்தியானந்தா மீது பாலியல், கடத்தல், கற்பழிப்பு என பல வழக்குகள் உள்ளன. போலீசாரால் தேடப்பட்டு வந்த நிலையில் 2019ல் தலைமறைவானார். நித்யானந்தாவின் தலைமை சீடர்களில் ஒருவராக இருந்தவர் நடிகை ரஞ்சிதா.
இதற்கிடையே கைலாசா என்னும் தீவுக்கு சென்றுவிட்டதாக நித்தியானந்தாவே கூறியிருந்தார். அதனை ஹிந்துக்களுக்கான நாடாக உருவாக்கியுள்ளதாகவும் அவரே கூறியிருந்தார்.
தங்களுக்கென தனியாக அரசு, தனிக் கொடி, பாஸ்போர்ட், நாணயம் உள்ளதாகவும், அந்நாட்டின் அதிபராக கூறிக்கொள்ளும் நித்தியானந்தா அறிவித்தார். ஆனால் அந்த நாடு எங்கு இருக்கிறது என்பது இன்னும் ரகசியமாக இருக்கிறது. அங்கிருந்து அவ்வபோது வீடியோ மூலம் சொற்பொழிவும் ஆற்றி, அதனை தனது பிரத்யேக யுடியூப் சேனலில் பதிவேற்றி வந்தார்.
இந்த நிலையில் கைலாசா நாட்டின் ‛லிங்க்டு இன்' இணையதள பக்கத்தில் ரஞ்சிதாவின் பெயர் ‛நித்யானந்த மாயி சுவாமி' என்றும், அவர் கைலாசா நாட்டின் பிரதமர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. எங்கிருக்கிறது என்றே தெரியாத ஒரு நாட்டிற்கு தனிக் கொடி, பாஸ்போர்ட், நாணயம் எல்லாம் ஓவராக இருக்கும் நிலையில், அந்த நாட்டிற்கு அதிபர், பிரதமர் எல்லாம் அறிவிக்கப்பட்டு விட்டனர்.




