ஏஆர் முருகதாஸ் ஒரு 'சந்தர்ப்பவாதி' : சல்மான்கான் ரசிகர்கள் விமர்சனம் | ரஜினி, கமல் இணையும் படம் : லோகஷே் கனகராஜ் மாற்றமா? | பிசாசு 2 எப்போது ரிலீஸ் : ஆண்ட்ரியா சொன்ன பதில் | அதை மட்டும் சொல்லாதீங்க : இந்திரா படக்குழு | டைரக்டர் ஆகிறாரா விஜய் சேதுபதி மகன்? | ரசிகர்கள் கிண்டல் : மன்னிப்பு கேட்ட 'வார் 2' வினியோகஸ்தர் | 'லியோ' மொத்த வசூல் 220 கோடி மட்டும் தானா? | செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' |
தரமணி, ராக்கி போன்ற படங்களில் நடித்த வசந்த் ரவி நடிப்பில் அடுத்து உருவாகி உள்ள படம் அஸ்வின்ஸ். தருண் தேஜா இயக்க விமலா ராமன், சரஸ்வதி மேனன், உதயா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் வேலைகள் நடந்து வந்தன. ஏற்கனவே, இந்த படம் ஜூன் 9ம் தேதி அன்று வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில் இப்போது ஜூன் 23ம் தேதி அன்று வெளியாகும் என்று புதிய போஸ்டர் உடன் படக்குழுவினர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். படம் தொடர்பான பணிகள் இன்னும் முடியாததால் ரிலீஸை தள்ளி வைத்ததாக சொல்கிறார்கள்.