சூர்யாவை உள்ளூரில் சுற்றுலா செல்ல வலியுறுத்திய விஜய் தேவரகொண்டா | மூணாறு தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுடன் நடனமாடிய விக்ரம் | இளையராஜாவை தாக்கி வசனமா? 'கருப்பு' படக்குழு விளக்கம் | மோகன்லாலை இயக்கும் பஹத் பாசிலின் ஆஸ்தான இயக்குனர் | சண்டை கலைஞர்கள், கராத்தே மாஸ்டருக்கு நன்றி கூறிய நடிகை அபிராமி | முதல்வரை சந்திக்கும் சினிமாதுறையினர் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? | தனுசை விட 100 மடங்கு சிறப்பாக நடித்து இருக்கும் கஸ்துாரிராஜா: மிஷ்கின் புகழாரம் | 20 கோடி கடன் வரவில்லை.. யாரும் போன் எடுக்கலை..: கே. ராஜன் பற்றி அவர் குடும்பத்தினர் | ஹாலிவுட் பாணியில் 'டாக்ஸிக்' படத்தின் விநியோக முறையை பின்பற்றும் யஷ்! | ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்து வரும் பிரபாஸ்! |

மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி மற்றும் பலர் நடிப்பில் கடந்த மாதம் 28ம் தேதி, ஐந்து மொழிகளில் தியேட்டர்களில் வெளியான படம் 'பொன்னியின் செல்வன் 2'.
இப்படம் பணம் செலுத்திப் பார்க்கும் முறையில் நேற்று ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. எச்டி தரத்தில் படத்தைப் பார்க்க ரூ.399 கட்டணம். படம் வெளியாகி ஒரு மாதத்திற்குள்ளாக ஓடிடி தளத்தில் படம் கட்டண முறையில் மட்டுமே பார்க்க வழி செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு வாரங்களில் அந்தக் கட்டணம் நீக்கப்பட்டு, பின் சந்தாதாரர்கள் மட்டும் கட்டணமில்லாமல் பார்க்க முடியும்.
'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாகம் வெளியான போதும் இதே முறையில்தான் வெளியானது. முதல் பாகத்தைப் போல இரண்டாம் பாகத்தை நிறைய பேர் தியேட்டர்களில் சென்று பார்க்கவில்லை. அதனால் இரண்டாம் பாகத்தின் வசூல் 300 கோடிக்கும் சற்றே கூடுதலாக மட்டுமே வசூலித்துள்ளது. முதல் பாக வசூல் 500 கோடியைத் தாண்டியது குறிப்பிடத்தக்கது. எனவே, இரண்டாம் பாகத்தை ஓடிடி தளத்தில் பலரும் பார்க்க வாய்ப்புள்ளது.