Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தங்கலான் படப்பிடிப்பில் விக்ரமுக்கு காயம்! மாளவிகா மோகனன் தகவல்!!

21 மே, 2023 - 11:35 IST
எழுத்தின் அளவு:
Vikram-injured-in-the-shooting-of-Thangalaan!-Malavika-Mohanan-shares-her-experience

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களிலும் நடித்த விக்ரம் தற்போது பா.ரஞ்சித் இயக்கும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். கேஜிஎப் கதையில் உருவாகி வரும் இந்த படத்தில் அவருடன் மாளவிகா மோகனன், பார்வதி மேனன், பசுபதி உள்பட பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சோசியல் மீடியாவில் ரசிகர்களுடன் உரையாடிய மாளவிகா மோகனன், தங்கலான் படத்தில் விக்ரமுடன் நடித்து வரும் அனுபவம் குறித்த சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், இந்த தங்கலான் படத்தை பொருத்தவரை விக்ரம் இல்லாமல் இந்த பயணத்தை என்னால் நினைத்து பார்க்க முடியாது. ஒவ்வொரு காட்சிகளிலும் அவர் எனக்கு உதவியாக இருந்துள்ளார். தான் மட்டுமின்றி தன்னைச் சுற்றி இருக்கும் அனைவருமே நன்றாக நடிக்க வேண்டும் என்ற அக்கறை கொண்டவர். அதோடு தன்னுடன் நடிப்பவர்களை தட்டிக் கொடுத்து ஊக்கப்படுத்துவது மட்டுமின்றி எப்போதும் கலகலப்பாக காமெடியாக பேசிக் கொண்டிருப்பார் விக்ரம் என்று கூறி இருக்கும் மாளவிகா மோகனன், விக்ரமுக்கு காயம் ஏற்பட்டதால் தற்போது தங்கலான் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவர் பூரண குணமடைந்ததும் மீண்டும் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்று ரசிகர்களின் கேள்விக்கு பதில் கொடுத்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
லிப்லாக், படுக்கையறை காட்சிகளில் நடிக்கும் சமந்தா!லிப்லாக், படுக்கையறை காட்சிகளில் ... ஜூன் மாதத்தோடு விஜய்யின் லியோ படப்பிடிப்பு முடிவடைகிறது! ஜூன் மாதத்தோடு விஜய்யின் லியோ ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)