தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் படமான ஸ்ரீதரின் முதல் கதை | காஜல் அகர்வாலுக்கு என்னாச்சு... | கென்யா ட்ரிப்பில் மொபைல் போனை பறிகொடுத்த பிரயாகா மார்ட்டின் | மாதவனை பழிக்குப்பழி வாங்கி விட்டேன் : அஜய் தேவ்கன் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | தீபாவளி ரிலீஸாக வெளியாகும் அனுபமா பரமேஸ்வரனின் இரண்டு படங்கள் |
மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி மற்றும் பலர் நடித்துள்ள 'பொன்னியின் செல்வன் 2' இந்த வாரம் ஏப்ரல் 28ம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
இப்படத்திற்கான புரமோஷன் நிகழ்வுகளை 'சோழர்களின் பயணம்' என தலைப்பு வைத்து ஏப்ரல் 15ம் தேதி சென்னையில் ஆரம்பித்தார்கள். அடுத்து கோவை, மீண்டும் சென்னை, டில்லி, கொச்சி, பெங்களூரு, ஐதராபாத் ஆகிய இடங்களில் பத்திரிகையாளர் சந்திப்பு, சில சிறப்பு பேட்டிகள் ஆகியவற்றுடன் நடந்தது. நேற்றும், இன்றும் அதே நிகழ்வுகள் 'ககாமுச்சி' நகரில் நடைபெற்று வருகிறது.
அது என்ன 'ககாமுச்சி' எனக் கேட்பீர்கள். மும்பையின் மிகப் பழமையான பெயர் தான் 'ககாமுச்சி'. நாளை திருச்சியில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதற்கடுத்த நாள் ஏப்ரல் 27ம் தேதி சென்னையில் படத்தில் நடித்துள்ள பல நட்சத்திரங்களுடன் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற உள்ளதாகத் தெரிகிறது. அத்துடன் 'சோழர்களின் பயணம்' இனிதே நிறைவடைய உள்ளது.
ஏப்ரல் 28ம் தேதி படம் வெளியாவதற்கு ஒரு நாள் முன்பு வரை சோழர்களின் பயணம் நடைபெறுவது குறிப்பிட வேண்டிய ஒன்று. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் இன்னும் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் இருக்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
படத்திற்கான முன்பதிவு ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. முதல் பாகத்தை விடவும் இந்த இரண்டாம் பாகத்தை இன்னும் அதிகமானோர் பார்க்கலாம் என்கிறார்கள். அதனால், படத்தின் வசூல் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.