‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

மாஸ்டர் படத்தை அடுத்து மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கும் தனது 67வது படத்தில் நடிக்கிறார் விஜய். இந்த படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடைபெற்றுள்ளதாக தெரிகிறது. ஆனால் படக்குழு ஒரு போட்டோவை கூட வெளியிடவில்லை. தொடர்ந்து படப்பிடிப்பும் தொடங்கப்பட்டிருக்கிறது. விஜய் 67வது படம் ஹாலிவுட்டில் வெளியான ‛எ ஹிஸ்டரி ஆப் வயலன்ஸ்' என்ற படத்தை தழுவி உருவாக இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், தற்போது அதை உறுதிப்படுத்தும் வகையில் இப்படம் குறித்த சில தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதாவது இந்த படத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஒரு வேடத்தில் விஜய் நடிக்கப் போகிறாராம். நரைமுடி கலந்த தாடி, மீசை வைத்தபடி அவரது கெட்டப் உருவாக்கப்பட்டுள்ளது. முக்கியமாக மனைவி, மகளுடன் வாழ்ந்து வரும் விஜய் எதிர்பாராத விதமாக கேங்ஸ்டராக உருவெடுக்கிறார். இதன் பிறகு அவரது வாழ்க்கை எப்படி எல்லாம் திசைமாறிப் போகிறது என்பதே விஜய் 67 வது படத்தின் கதை என்று தற்போது ஒரு தகவல் கசிந்து இருக்கிறது.




