சிக்கலில் இருந்து மீண்ட ‛கருப்பு' | விஜய் தேவரகொண்டா படத்தில் ‛தி மம்மி' பட வில்லன் | லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தின் அப்டேட் | கிரிக்கெட்டர் ஸ்ரீகாந்த் மகன் அனிருத்தா உடன் நடிகை சம்யுக்தா திருமணம் | காசியில் தனுஷ்: கங்கைக்கு ஆரத்தி எடுத்து பிரார்த்தனை | ரீரிலீஸ் படத்துக்கு ஆதரவு கொடுக்காத ஹீரோக்கள் | 'நிஞ்சா' பட பூஜையில் நாய்: ஏன் தெரியுமா? | டேனியல் பாலாஜி இறந்தவிட்டார் என நம்ப முடியல: பிபி180 இயக்குனர் வேதனை | கடும் போட்டியை சந்திக்கப் போகும் 'ஜனநாயகன்' | 'ஸ்பைடர்' தோல்வி என் பயணத்தைத் தடுத்தது : ரகுல் ப்ரீத் சிங் |

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா போன்ற படங்களை இயக்கியவர் பொன்ராம். தற்போது விஜய் சேதுபதி, அனு இமானுவல் நடித்துள்ள டிஎஸ்பி என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இமான் இசையமைத்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு இந்த படம் மூலம் தமிழில் பாடி இருக்கிறார் உதித் நாராயணன்.
அவருடன் இணைந்து எடுத்த போட்டோவை பகிர்ந்து, ‛‛நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தில் உதித் நாராயணன் பின்னணி பாடி இருக்கிறார். அவருடன் சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் கணேசனும் இணைந்து பாடி இருக்கிறார். அவருடன் பணிபுரிவது மகிழ்ச்சி. அவர் பாடியுள்ள இந்த பாடலை பாடலாசிரியர் விஜய் முத்து பாண்டியன் எழுதியிருக்கிறார். இந்த பாடல் விரைவில் சிங்கிள் பாடலாக வெளியாக உள்ளது'' என்று தெரிவித்திருக்கிறார் இமான்.
கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த டிஎஸ்பி படத்தின் முதல் பார்வை சில தினங்களுக்கு முன்பு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.