நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

கிராமத்து பாடல்கள் மூலம் பிரபலமானவர்கள் செந்தில் - ராஜலட்சுமி தம்பதியர். விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியும் அவர்களுக்கு ஒரு அடையாளத்தை தந்தது. தொடர்ந்து அந்த டிவியில் பல ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்றனர். இருவரும் சினிமாவிலும் பல பாடல்களை இணைந்து பாடி உள்ளனர். குறிப்பாக ராஜலட்சுமி குரலில் வெளியான ‛‛என்ன மச்சான், சாமி சாமி'' பாடல்கள் மிகவும் பிரபலமானது.
இந்நிலையில் சினிமாவில் நடிகையாக களமிறங்கி உள்ளார் ராஜலட்சுமி. நார்மல் பிலிம் பேக்டரி சார்பாக இளஞ்செழியன் தனது நண்பர்களுடன் சேர்ந்து தயாரிக்கும் படம் "லைசென்ஸ்". இந்த படத்தில் முதன்மை வேடத்தில் இவர் நடிக்கிறார். ராதாரவி, அறிமுக நடிகரான விஜய் பாரத், மதுரை ரிஷி, குழந்தை நட்சத்திரம் அதிதி பாலமுருகன் ஆகியோரும் நடிக்கின்றனர்.
தந்தை மகள் பாசப் பின்னணியுடன் பெண்களின் பாதுகாப்பு தன்மையை பற்றி விவாதிக்கும் பரபரப்பான கதையாக இருக்கும் என்கிறார் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் கணபதி பாலமுருகன். இவர் கவுண்டமணி நடித்து வெற்றிகரமாக ஓடிய "எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது".என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.