டொவினோ தாமஸ், கயாடு லோகரின் பள்ளிச்சட்டம்பி ரிலீஸ் தேதி அறிவிப்பு | சத்தா பச்சா பட முதல் டிக்கெட்டை வாங்கி ஆன்லைன் விற்பனையை துவங்கி வைத்த மோகன்லால் | ரீல்ஸ் வீடியோ மூலம் மம்முட்டிக்கு ஜோடியான பல்கலைக்கழக பெண் அதிகாரி | பிளாஷ்பேக் : சூசைட் பாயிண்ட்டில் ‛நாயகன்' பட நடிகையின் உயிரை காப்பாற்றிய மோகன்லால் | முன்னணி நடிகர்களின் படங்களுக்கு நீண்ட காத்திருப்பு | 100 கோடி கிளப்பில் ‛பராசக்தி' : சிவகார்த்திகேயனுக்கு 5வது படம் | இப்பவும் கதை கேட்கும்போது துாங்குறீங்களா? : அஸ்வின் சொன்ன பதில் | விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா திருமண ஏற்படுகள் தீவிரம் | தெலங்கானா : டிக்கெட் கட்டண உயர்வுக்கு 90 நாள் விதி | 'இளையராஜா' பயோபிக் இந்த வருடமாவது ஆரம்பமாகுமா ? |

நடன இயக்குனர்கள் நடிகர்களாவது சமீபகாலமாக அதிகரித்துள்ளது. பிரபுதேவா, லாரன்ஸ், ஹரிகுமார், தினேஷ், ஸ்ரீதர் உள்பட ஏராளமானவர்கள் நடிகர்களாகி இருக்கிறார். இவர்களை தொடர்ந்து அடுத்து வருகிறார் ஜாய்மதி . இவர் 100 படங்களுக்கு மேல் நடன இயக்குனராக பணிபுரிந்து , குறும்படங்களில் நடித்தும், இயக்கியும் அனுபவம் பெற்றவர் . நற்பவி என்ற படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
ஜாய் மதியுடன் ப்ரீத்தி, மதுமிதா, காவியா, சந்தானபாரதி, சம்பத்ராம், பாலசுப்ரமணியம், முனீஷ், ஈஸ்வர் சந்திரபாபு, ஷர்மிளா, யாசர், தர்ஷன், நதீம், முல்லை, கோதண்டம், ஜெமினிபாலு உள்பட பலர் நடிக்கின்றனர். விஜய் திருமூலம் ஒளிப்பதிவையும், தயானந்த் பிறைசூடன் இசையையும் கவனிக்கிறார்கள்.
அறிமுக இயக்குனர் எஸ்.ஜே.திவாகர் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது: நம் நாட்டின் முதுகெலும்பாக இருப்பது விவசாயம். அப்படி விவசாயம் செய்துவரும் கதாநாயகனுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற தணியாத தாகத்தால் அதற்கான முயற்சியில் ஈடுபடுகிறார்.
இதற்கிடையில் முறைப்பெண்ணின் காதல், இவரை விரும்பும் இன்னொரு பெண், கோவில் திருவிழா, கிராமத்தின் முன்னேற்றம் என பல்வேறு பிரச்சனைகளை கதாநாயகன் சமாளிக்க போராடும் நிலையில் ஒரு கொலை பழியும் நாயகன் மீது விழுகிறது.
இதிலிருந்து மீள்வதற்கான நடவடிக்கையில் ஈடுபடும் நாயகன் வாழ்வில் அந்த திடுக்கிடும் சம்பவம் நிகழ்கிறது. இப்படி விறுவிறுப்பாக செல்லும் திரைக்கதை படம் பார்ப்பவர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் படத்தை இயக்கி உள்ளேன். என்கிறார் இயக்குனர்.




