தனுஷ் 55வது பட வெளியீடு எப்போது தெரியுமா? | 'புருஷன்' படத்தின் படப்பிடிப்பில் சுந்தர்.சி தீவிரம்! | துருவ் விக்ரமிற்கு ஜோடியாகும் ஜான்வி கபூர்! | மீண்டும் தெலுங்கு நடிகரை வைத்து படம் இயக்கும் லிங்குசாமி! | ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிப்போன அஜித் படம்! | ரஜினி 173வது படத்தின் முக்கிய அப்டேட்! | 63 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'பெத்தி' டிரைலர் | இந்த வாரம், புதிய படங்கள் இல்லையா ? | 'சேயோன்' படப்பிடிப்பு தொடங்கியது: மதுரை விழாவில் கமல் பங்கேற்பு | நடுநிலையாளர்கள் முன்னிலையில் பேச்சு வார்த்தை: தயாரிப்பாளர்களுக்கு நடிகர் சங்கம் கோரிக்கை |

பெங்களூரை சேர்ந்தவர் பிரணிதா சுபாஷ். கன்னட படங்களில் நடித்துக் கொண்டிருந்தவர் உதயன் படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். இதில் அவர் அருள்நிதி ஜோடியாக நடித்திருந்தார். அதன்பிறகு கார்த்தியுடன் சகுனி, சூர்யாவுடன் மாஸ் படங்களில் நடித்தார். அதன் பின்னர் எனக்கு வாய்த்த அடிமைகள்,. ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
கடந்த ஆண்டு நிதின் ராஜ் என்ற தொழில் அதிபரை மணந்து கொண்டவர் கடந்த ஜூன் மாதம் தாய் ஆனார். இதனால் கடந்த ஒரு ஆண்டாக எந்த படத்திலும் நடிக்காமல் இருந்தார். தற்போது மீண்டும் நடிக்க தயாராகி விட்டார்.
தனது சமூக வலைத்தள பக்கங்களில் கவர்ச்சி படங்களை வெளியிட்டு, அம்மா கடமைகளை முடித்து விட்டதாக தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் அவர் நடிக்கத் தயாராகி விட்டதை அறிவித்தார். இதற்கிடையில் கன்னடத்தில் ராமண அவதாரா என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.




