லலித் மோடியின் பயோபிக்கில் நடிக்கிறாரா ரன்வீர் சிங்? | பிரபல பாலிவுட் நடிகரின் மனைவியிடம் 16 கோடி மோசடி | பிளாஷ்பேக் : நடனத்திற்காக அஞ்சலிதேவி நடித்த படம் | நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் | வெற்றியை தேடி ஓடாதீங்க... திறமையை மேம்படுத்துங்க : மனோஜ் பாஜ்பாய் |

2026ம் ஆண்டின் முதல் பெரிய வெற்றியாக கடந்த வாரம் வெளியான 'கருப்பு' படம் அமைந்துள்ளது. உலகம் முழுவதும் 147 கோடி வசூலித்ததாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். 100 கோடி வசூலைக் கடந்து, லாபத்தைக் கொடுக்கக் கூடிய படமாக இப்படம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வாரம் 'கருப்பு' படத்துடன் “கரா, சட்டென்று மாறுது வானிலை” ஆகிய படங்கள் வெளிவந்தன. அந்தப் படங்களுடன் இந்த வருடத்தில் இதுவரையில் வெளியான படங்களின் எண்ணிக்கை 90ஐக் கடந்துவிட்டது.
இந்த வாரத்தின் வெள்ளிக்கிழமையான மே 22ம் தேதி புதிய படங்களின் அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. கடைசி நேரத்தில் ஏதாவது ஒரு சில படங்கள் வெளிவர வாய்ப்புள்ளது.
அடுத்த வாரம் மே 28ம் தேதி அர்ஜுன், அபிராமி நடித்த 'பிளாஸ்ட்' படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை அடுத்த வாரத்துடன் நிறைவுக்கு வர உள்ளதால் மேலும் சில படங்கள் வெளியாகலாம்.
ஜுன் மாதத்திற்கான வெளியீடுகள் என்னென்ன என்பது விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' படத்தின் அறிவிப்பு வந்த பிறகுதான் தெரிய வரும்.