நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் | வெற்றியை தேடி ஓடாதீங்க... திறமையை மேம்படுத்துங்க : மனோஜ் பாஜ்பாய் | ‛சிங் கீதம்' படம் என் 40 ஆண்டு கனவு : இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் | ரஜினி, சிம்பு, பிரதீப்... : 3 படங்கள் வைத்திருக்கும் அஷ்வத் மாரிமுத்து | நோவா படத்தில் ஆக் ஷனில் ரைசா வில்சன் |

புச்சி பாபு சனா இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இயக்கத்தில், ராம் சரண், ஜான்வி கபூர் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்குத் திரைப்படம் 'பெத்தி'. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மும்பையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் இயக்குனர் புச்சி பாபு சனா, இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான், ராம் சரண், ஜான்வி கபூர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இப்படத்தின் டிரைலர் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டது. மொத்தமாக இந்த டிரைலர் ரியல் டைமில் 63 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
தற்போது வரையில் தெலுங்கு டிரைலர் 26 மில்லியன், ஹிந்தி டிரைலர் 22 மில்லியன், தமிழ் டிரைலர் 4.6 மில்லியன், கன்னட டிரைலர் 4.1 மில்லியன், மலையாள டிரைலர் 2.4 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. 24 மணி நேரம் முடிய இன்னும் சில மணி நேரங்கள் உள்ளதால் இந்தப் பார்வைகள் இன்னும் அதிகமாக வாய்ப்புள்ளது.