ரூ.300 கோடி வசூலை தாண்டியது ‛பெத்தி' | ஒரே இயக்குனர்... ரூ.400 சம்பளம் டூ ஹீரோ: விஜய் சேதுபதி நெகிழ்ச்சி | ஜூன் 10ல் வெளியாகும் ‛மகுடம்' பட டீசர் | பிளாஷ்பேக்: ஒரே திரைப்படத்தில் தன் இருபெரும் ஆசைகளை நிறைவேற்றிக் கொண்ட கே பாக்யராஜ் | லலித் மோடியின் பயோபிக்கில் நடிக்கிறாரா ரன்வீர் சிங்? | பிரபல பாலிவுட் நடிகரின் மனைவியிடம் 16 கோடி மோசடி | பிளாஷ்பேக் : நடனத்திற்காக அஞ்சலிதேவி நடித்த படம் | நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் |

சிவகார்த்திகேயன், பாக்யஸ்ரீ போர்ஸ் இணைந்து நடிக்கும் 'சேயோன்' படத்தின் படப்பிடிப்பு நேற்று மதுரையில் தொடங்கியுள்ளது. இதை முன்னிட்டு நடந்த பூஜையில் கமல்ஹாசன் கலந்து கொண்டார். 'அமரன்' படத்தின் வெற்றிக்குப் பிறகு, சிவகார்த்திகேயன் மீண்டும் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்துள்ள படம் இது. கமல்ஹாசன் மற்றும் ஆர்.மகேந்திரன் ஆகியோரால் தயாரிக்கப்படுகிறது.
இந்த படம் மதுரையை சுற்றியுள்ள பகுதிகளை கதை களமாக கொண்டுள்ளது. சமீபத்தில் வெளியான 'கருப்பு' பாணியிலான படம் என்கிறார்கள். சேயோன் என்றால் 5 தலைமுறைக்கு முந்தைய தலைவன் என்றும், குலம் காத்த குலசாமி என்றும் கூறப்படும், சிவபெருமான், முருகனின் பெயர்களில் சேயோனும் ஒன்று. 'தாய்கிழவி' படத்தை இயக்கிய சிவக்குமார் முருகேசன் இயக்குகிறார், சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.