‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

தன்னை ஏமாற்றி நில மோசடி செய்ததாக காமெடி நடிகர் சூரி, நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை மீது அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் கைதாவார் என்று தெரிகிறது.
நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும், முன்னாள் டிஜிபியுமான ரமேஷ் குடவாலா மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன் ஆகியோர் இடம் வாங்கித் தருவதாக கூறி 2 கோடியே 90 லட்சம் வாங்கினார்கள். ஆனால் இடம் வாங்கித் தராமல் ஏமாற்றினார்கள். இதுகுறித்து புகார் அளித்த பிறகு ஒரு கோடியே 30 லட்சத்தை திருப்பிக் கொடுத்து விட்டு மீதமுள்ள பணத்தை தராமல் மோசடி செய்து விட்டனர் என்று சூரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதைத்தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் மீனா தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நடிகர் சூரி துணை கமிஷனர் மீனா முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார். இந்த விசாரணையில், நடிகர் சூரியிடம் முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா மற்றும் சினிமா தயாரிப்பாளர் அன்புவேல் ராஜ் பணம் பெற்றது ஆவணங்கள் மூலம் உறுதியாகி உள்ளது. இதைதொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா மற்றும் சினிமா தயாரிப்பாளர் அன்புவேல் ராஜ் மீது மோசடி வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கில் ரமேஷ் குடவாலாவும், அன்புவேல்ராஜனும் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. அதற்கு முன்பு ரமேஷ் குடாவாவையும், அன்புவேல்ராஜனையும் நேரில் அழைத்து விசாரிக்கவும் குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.




