ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் புனித் ராஜ்குமார். மிகப்பெரிய கலைக்குடும்பமான ராஜ்குமார் குடும்ப வாரிசு. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 29ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். 46வயதே ஆன அவரது மரணம் கன்னட திரையுலகம் மட்டுமின்றி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அவர் நடித்த கடைசி படமான ஜேம்ஸ் மிகப்பெரிய வெற்றி பெற்றிருப்பதுடன் வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. இந்த நிலையில் மைசூர் பல்கலைக்கழகத்தின் 102 வது பட்டமளிப்பு விழாவில் புனித்துக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அவரது மனைவி அஸ்வினி அதனைப் பெற்றுக் கொண்டார். புனித் ராஜ்குமாரின் தந்தை ராஜ்குமாருக்கும் கடந்த 1976ம் ஆண்டு, மைசூர் பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.