
ராகவா லாரன்ஸை இயக்கும் ஐஸ்வர்யா ரஜினி
இந்நிலையில் ஐஸ்வர்யா தற்போது ராகவா லாரன்ஸ் உடன் புதிய படத்திற்காக கூட்டணி அமைத்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு ராகவா லாரன்ஸை சந்தித்து பேசியுள்ளார் ஐஸ்வர்யா. அந்த சந்திப்பு குறித்த தகவலையும், புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது " சுவாரசியமான ஒன்று உருவாகிறது... என் அன்பான ராகவா லாரன்ஸ் அண்ணாவை சந்தித்த பிறகு என் மூளை துடிக்கிறது.. வொர்க்மோட் ஆன்.. எப்போது, எப்பொழுது வேண்டுமானாலும்!" என்று தெரிவித்துள்ளார்.
இந்த பதிவின் மூலம் விரைவில் இவர்கள் கூட்டணியில் புதிய படம் ஒன்று உருவாகலாம் என தெரிகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!