ஜன., 30ல் திரைக்கு வரும் ‛கருப்பு பல்சர்' | மீண்டும் லோகேஷ், ரத்னகுமார் கூட்டணி | மீண்டும் இணையும் விஜய் சேதுபதி, நலன் குமாரசாமி கூட்டணி | விஜய் பட தலைப்பில் கென் கருணாஸ் | வழக்கு போட்டதை தவிர்த்திருக்க வேண்டுமா 'ஜனநாயகன்' | தெலுங்கிற்குத் தாவும் முன்னணி இயக்குனர்கள் : சம்பளம் காரணமா? | பொங்கல் நாள் வாழ்த்துகளைக் குவித்த படங்கள் | ஜனவரி 23ல் நிவின்பாலியின் 'பேபி கேர்ள்' ரிலீஸ் | ஜெயராம், காளிதாஸ் இணைந்து நடத்துள்ள படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரம்பா மகளா இவர்... : பிறந்தநாள் கொண்டாடிய லான்யா |

'புஷ்பா' நாயகனாக அல்லு அர்ஜுன் குடும்பத்தாருக்குச் சொந்தமான ஓடிடி நிறுவனம் 'ஆஹா'. இந்நிறுவனம் தற்போது இந்திய ஓடிடி சந்தையில் சர்வதேச ஓடிடி நிறுவனங்களான அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார், நெட்பிளிக்ஸ் ஆகியவற்றுடன் போட்டி போட்டு களத்தில் இறங்கியுள்ளது.
தற்போது பல தமிழ்ப் படங்களையும் இந்நிறுவனம் வாங்கியுள்ளது. சமுத்திரக்கனி நடித்த 'ரைட்டர்' படம் நாளை மறுநாள் பிப்ரவரி 11ம் தேதி இந்த ஓடியில் வெளியாக உள்ளது. அடுத்து சரத்குமார் நடிப்பில் ராஜேஷ் எம் செல்வா இயக்கியுள்ள 'இரை' என்ற ஓடிடி ஒரிஜனல் பிப்ரவரி 18ம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிறுவனம் தெலுங்குத் திரையுலகத்தின் ஆக்ஷ்ன் ஸ்டார் ஆன பாலகிருஷ்ணா தொகுத்து வழங்கிய 'அன்ஸ்டாப்பபிள்' என்ற டாக் ஷோ ஒன்றை நடத்தி வந்தது. தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நட்சத்திரங்கள் அதில் கலந்து கொண்டார்கள். அந்த நிகழ்ச்சி இதுவரையில் 40 கோடி நிமிடங்கள் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளதாக ஆஹா நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் அவர்களது ஓடிடி தளத்தில் அதிகமாகப் பார்க்கப்பட்ட நிகழ்ச்சி இதுதான் என்றும் தெரிவித்துள்ளார்கள்.