Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

புனித் ராஜ்குமாரின் 'கந்தடா குடி' டைட்டில் டீசர் வெளியீடு

07 டிச, 2021 - 12:33 IST
எழுத்தின் அளவு:
Puneeth-Rajkumar-Gandhada-Gudi-Title-teaser-out

கன்னடத் திரையுலகின் மாஸ் ஹீரோவான புனித் ராஜ்குமார் கடந்த அக்டோபர் மாதம் மாரடைப்பால் திடீரென காலமானார். அவரது மறைவு கன்னடத் திரையுலகத்தினரை மட்டுமல்ல இந்தியத் திரையுலகினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

புனித் நடித்துள்ள 'கந்தடா குடி' என்ற படத்தின் டைட்டில் டீசர் நேற்று புனித்தின் அம்மா மறைந்த பர்வதம்மா ராஜ்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. புனித்தின் அண்ணன் ஷிவராஜ்குமார், கேஜிஎப் நடிகர் யாஷ் இருவரும் இந்த டீசரை வெளியிட்டனர்.

இயற்கை, மண் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை விளக்கும் படம் தான் 'கந்தடா குடி'. அமோகவர்ஷா இப்படத்தை இயக்கி புனித் ராஜ்குமாருடன் இணைந்து நடித்துள்ளார். கர்நாடக மாநிலத்தின் காடுகள், இயற்கைப் பகுதிகளில் அதன் பெருமையைச் சொல்லும் விதத்திலும் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளதாம்.

தற்போது இந்தப் படம் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் இருக்கிறது. 2022ம் ஆண்டு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். புனித் ராஜ்குமாரின் மனைவி அஸ்வினி இப்படத்தைத் தயாரித்துள்ளார். கர்நாடகத் திரையுலகத்தைச் சேர்ந்த சினிமா பிரபலங்கள் பலரும் இந்த டீசரை அவர்களது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு புனித்தை நினைவு கூர்ந்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கதை எழுதும்போதே நயன்தாராவை  தன் அம்மாவுக்கு மருமகளாக்க முடிவு செய்தாரா விக்னேஷ் சிவன் ?கதை எழுதும்போதே நயன்தாராவை தன் ... குரலில் என்றும் ‛‛துள்ளுவதோ இளமை...'' - திரையிசையின் ‛‛பட்டத்து ராணி...'' எல்.ஆர்.ஈஸ்வரி குரலில் என்றும் ‛‛துள்ளுவதோ ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in