Advertisement

சிறப்புச்செய்திகள்

ஜூன் 10ல் வெளியாகும் ‛மகுடம்' பட டீசர் | பிளாஷ்பேக்: ஒரே திரைப்படத்தில் தன் இருபெரும் ஆசைகளை நிறைவேற்றிக் கொண்ட கே பாக்யராஜ் | லலித் மோடியின் பயோபிக்கில் நடிக்கிறாரா ரன்வீர் சிங்? | பிரபல பாலிவுட் நடிகரின் மனைவியிடம் 16 கோடி மோசடி | பிளாஷ்பேக் : நடனத்திற்காக அஞ்சலிதேவி நடித்த படம் | நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சினிமா பிரபலங்களின் வாழ்த்து மழையில் முதல்வர் விஜய்

10 மே, 2026 - 01:24 IST
எழுத்தின் அளவு:
Chief-Minister-Vijay-showered-with-congratulations-from-film-celebrities
Advertisement


தமிழக முதல்வராக நடிகர் விஜய் இன்று (மே 10) பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் கமல்ஹாசன்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், முதல்வர், தம்பி விஜய் அவர்களின் தலைமைத்துவத்தில் தமிழ்நாடு சிறக்கட்டும். புதிய உயரங்களை அடையட்டும். என் இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்
வாழ்த்துக்கள் முதல்வர் விஜய் சார்!! முதல்வர் விஜய் சார் மற்றும் அவரது முழு குழுவினருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். எங்களுக்கு ஒரு சிறந்த ஆட்சியை வழங்க வாழ்த்துகிறோம்.

இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி
மாண்புமிகு தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய்!!! இது நம்ப முடியாததாக இருக்கிறது ..!!! உங்களுக்கும் உங்கள் அமைச்சரவைக்கும் வாழ்த்துகள்…!!! உங்களையும் உங்கள் நோக்கங்களையும் அறிந்திருப்பதால், அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் முற்போக்கான உங்கள் அரசு நமது பெருமைமிக்க மாநிலத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்று எதிர்பார்க்கிறேன் !!! உங்களுக்கு நல்வாழ்த்துக்கள்! கடவுள் நம் அனைவரையும் ஆசீர்வதிக்கட்டும் !!!

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்
சி.ஜோசப் விஜய் எனும் நான்!! புதிய சகாப்தம் தொடங்குகிறது.

நடிகை சிம்ரன்
என் அன்பு நண்பரும், மக்கள் தலைவரும், உண்மையான ஜனநாயகனுமான விஜய், தமிழக முதல்வராகப் பதவியேற்றமைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இன்று ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் மட்டுமல்ல, இது ஒரு சக்திவாய்ந்த புதிய சகாப்தத்தின் தொடக்கத்தையும் குறிக்கிறது.

நடிகர், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்
தமிழக முதல்வராகப் பதவியேற்ற விஜய்க்கும், அமைச்சர்களாகப் பதவியேற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். புதிய அரசு மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றி, வெளிப்படையான மற்றும் முற்போக்கான ஆட்சியை உறுதிசெய்து, தமிழகத்தை மேலும் வளர்ச்சி மற்றும் செழிப்பின் பாதையில் வழிநடத்தும் என்று நான் நம்புகிறேன்.

நடிகர் பிரபுதேவா
அற்புத மனிதர்! முதல்வருக்கு வாழ்த்துகள்!

நடிகை நக்மா
இறுதியாக!!! வாழ்த்துகள் தமிழக முதல்வர் விஜய். தயவுசெய்து மக்களுக்காகப் பணியாற்றி, மிகுந்த பணிவுடன் அவர்களுக்குச் சேவை செய்யுங்கள். உங்களுக்கு என் நல்வாழ்த்துக்கள்.

நடிகர் அருண் விஜய்
தமிழகத்திற்கு இன்று ஒரு மகத்தான நாள். எத்தனை தடைகள் வந்தாலும், அத்தனையும் தகர்த்தி, இன்று தமிழக முதல்வராக பதவி ஏற்றிருக்கும் என் அன்பு சகோதரர், சி.ஜோசப் விஜய்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். மக்களின் நம்பிக்கையோடு உங்கள் ஆட்சி தொடங்கட்டும்.

நடிகர் ராகவா லாரன்ஸ்
தமிழகத்தின் புதிய முதல்வராக பதவியேற்றதற்கு வாழ்த்துகள், நண்பா விஜய். உங்கள் இந்தப் புதிய பயணத்திற்காக ராகவேந்திர சுவாமியைப் பிரார்த்திக்கிறேன்.

நடிகை ரோஜா
என் இணை நடிகராக திரைப் பயணத்தில் ஒன்றாக நடந்துசென்ற நடிகர் விஜய்.. இன்று மக்களின் ஆசீர்வாதத்துடன் தமிழக முதல்வராக பதவியேற்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. வரும் நாட்களில் மக்கள் சேவையிலும் அதே அர்ப்பணிப்பு, நேர்மை மற்றும் உறுதியுடன் முன்னேற வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன். விஜய் அவர்களுக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள். மக்களின் நம்பிக்கையை காக்கும் வெற்றிகரமான ஆட்சி அமையட்டும் என வாழ்த்துகிறேன்.

நடிகர் பார்த்திபன்
அன்னையர் தின வாழ்த்துகள். ஒரு தாய் ….. தான் பெற்ற மக்களின் நலத்தையே தன் உயிர் போல் பேணி காப்பாள். அப்படி இன்று தான் பெற்ற உயர்வுக்கு காரணமான தம் மக்களின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு ஆட்சி செய்யப் போகும் தமிழக முதல்வர் ஜோசப் விஜயை ஒரு 'தாய்' என மதித்து வணங்கி வாழ்த்திப் பாராட்டி மகிழ்கிறேன்.
தென்னிந்திய நடிகர் சங்கம்தென்னிந்திய நடிகர் சங்கத்தின் வரலாற்றில் இன்று புது அத்தியாயம். கிரீடத்தில் இன்னுமொரு வைரம் எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரை தொடர்ந்து நான்காம் உறுப்பினராக ஜோசப் விஜய் தமிழக முதல்வராக பதவி ஏற்று கொண்டதில் தென்னிந்திய நடிகர் சங்கம் அளவிலா மகிழ்வும் பெருமிதமும் கொள்கிறது. எடுத்துகு்கொண்ட பொறுப்பினை நிறைவுற புகழ்பெற தென்னிந்திய நடிகர் சங்கம் இதயப்பூர்வமான நல்வாழ்த்துகள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
எங்களுக்கு அழைப்பு வரலை: சினிமா சங்கங்கள் வருத்தம்எங்களுக்கு அழைப்பு வரலை: சினிமா ... நயன்தாரா எனக்கு அக்கா... ஏன்னா? சென்னையில் ஸ்ரீலீலா சொன்ன விஷயம் நயன்தாரா எனக்கு அக்கா... ஏன்னா? ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap