பிளாஷ்பேக்: மறைந்த மலையாள நடிகர் ஜெயனை நினைவு கூறும் ஒரே தமிழ் திரைப்படம் “பூட்டாத பூட்டுக்கள்” | மங்காத்தா, தெறி: ரீரிலீஸ் டிரைலர் மோதல் | தோல்வியை நோக்கி, பிரபாஸின் 'தி ராஜா சாப்' | பார்வதியாக நடிக்கும் நபா நடேஷ் | முதல் பாகத்தை விட அதிக பட்ஜெட்டில் தயாராகும் 'மரகத நாணயம் 2' | 'ஜனநாயகன்' வழக்கு நாளை, ஜனவரி 20ல் மீண்டும் விசாரணை | யஷ், பிரபாஸ் பாணியில் விஜய் சேதுபதி | 2026ம் ஆண்டிலும் தொடரும் வாராவார வெளியீடுகள் | பிளாஷ்பேக் : 'பேசும் படம்' உருவான கதை | பிளாஷ்பேக்: ஒரே ஒரு படத்தில் மட்டும் வில்லனாக நடித்த எம்.கே. ராதா |

சிவா இயக்கத்தில், ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடித்துள்ள 'அண்ணாத்த' படம் தீபாவளிக்கு வெளிவர உள்ளது. இப்படத்தை தனது பேரன்களுடன் சமீபத்தில் பார்த்தார் ரஜினிகாந்த். அது பற்றியும் அவர் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில் ரஜினியின் இளைய மகளான சவுந்தர்யா ரஜினிகாந்த் ''அண்ணாத்த' படத்திற்குப் பிறகு மீண்டும் ரஜினிகாந்த், சிவா இணைய் வேண்டும்” என விருப்பம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக வலைத்தளத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது, “அண்ணாத்த'' படத்துல நீங்க என்ன பண்ணியிருக்கீங்கன்னு மக்கள் இன்னும் பார்க்கலை சிவா சார், ஆனா, நான் பார்த்துட்டேன். படம் பார்த்துட்டு நான் வெளிய வந்து, உங்க கைய பிடிச்சிக்கிட்டு கண்ணுல தண்ணியோட நீங்க பண்ணது மேஜிக் இல்லை, அதுக்கு என்ன சொல்லணும்னே தெரியலை. தலைவரோட வெறித்தனமான ஒரு ரசிகையாவும், அப்பாவோட மகளாவும் நீங்க அப்பாவை பார்த்துக்கிட்ட முறைய வச்சி, கண்ணடிப்பா, நீங்க, அப்பா, உங்க மொத்த குழு 'அண்ணாத்த' படத்துக்கப்புறம் திரும்பவும் வேலை பார்க்கணும் சார்,” என கேட்டுக் கொண்டுள்ளார்.
மகளின் ஆசையை ரஜினிகாந்தும், இயக்குனர் சிவாவும் நிறைவேற்றுவார்களா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.




