பொங்கல் நாள் வாழ்த்துகளைக் குவித்த படங்கள் | ஜனவரி 23ல் நிவின்பாலியின் 'பேபி கேர்ள்' ரிலீஸ் | ஜெயராம், காளிதாஸ் இணைந்து நடத்துள்ள படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரம்பா மகளா இவர்?; பிறந்தநாள் கொண்டாடிய லான்யா | மலையாள 'எக்கோ' பட நடிகையை பாராட்டிய தனுஷ் | 'திரிஷ்யம் 3' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த மோகன்லால் | எனக்கு நானே போட்டி: கிர்த்தி ஷெட்டியின் தன்னம்பிக்கை | விஜே சித்துவின் 'டயங்கரம்' படத்தின் முதல் பார்வை வெளியானது! | தனுஷ் 54வது படத்தின் தலைப்பு 'கர' | அருள்நிதி, ஆரவ் இணைந்து நடிக்கும் 'அருள்வான்' |

நடிகர் ராகவா லாரன்ஸ் தற்போது ருத்ரன், அதிகாரம், துர்கா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இன்றைய தினம் தனது பிறந்தநாளை அவர் கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தனது டுவிட்டரில் பெரிய அளவிலான ராகவேந்திர சுவாமியின் சிலை முன்பு தான் அமர்ந்திருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் லாரன்ஸ். அதோடு, இந்தியாவிலேயே மிகப்பெரிய அளவிலான ராகவேந்திரா சுவாமிகளின் சிலையை நிறுவ வேண்டும் என்பது எனது கனவாக இருந்து வந்தது. அது தற்போது நனவாகியுள்ளது. மிக விரைவில் அந்த சிலை பொதுக்களின் வழிபாட்டுக்காக அர்ப்பணிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த சிலை 15 அடி நீளத்தில் மார்பிள் கற்களால் உருவாக்கப்பட்டுள்ளது. ராகவேந்திரா சுவாமி சிலை முன்பு லாரன்ஸ் அமர்ந்திருக்கும் புகைப்படம் வைரலானது.