தனுஷ் 55ல் இணைந்தார் ஸ்ரீலீலா | போட்டோகிராபர் செய்த செயல் : கசப்பான அனுபவம் பகிர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ் | அட்லி, அல்லு அர்ஜுன் படப்பிடிப்பில் பிப்ரவரி முதல் இணையும் ஜான்வி கபூர் | ரஜினி 173வது படத்தின் கதை ஹாலிவுட் படத்தின் தழுவலா? | ஜூலையில் வெளியாகும் சூர்யா 46வது படம் | பெத்தி படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மிருணாள் தாக்கூர் | பிளாஷ்பேக் : இரவு காட்சிகளை பகலில் படமாக்கிய முதல் படம் | 2027 ஏப்ரல் 7 : வாரணாசி வெளியீட்டு தேதி அறிவிப்பு | கேரளா ஸ்டோரி இரண்டாவது பாகமும் பரபரப்பு கிளப்புகிறது | வேள்பாரி கதையில் நடிக்கப்போவது யார்? : ரஜினிக்கு கவுரவ வேடமா? |

கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான தர்ஷன் கடந்த வருடம் தனது ரசிகரான ரேணுகா சுவாமி என்பவரை கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தற்போது சிறைவாசம் அனுபவித்து வருகிறார். இடையில் ஜாமீனில் சில மாதங்கள் அவர் வெளியே வந்த நிலையில் அவர் ஏற்கனவே நடித்து வந்த தி டெவில் படத்தின் வேலைகளை முடித்துக் கொடுத்திருந்தார். தற்போது அவர் மீண்டும் சிறைவாசம் அனுபவித்து வரும் நிலையில் தி டெவில் படம் வரும் டிசம்பர் 11ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இதற்கு முன்னதாக மலையாள நடிகர் திலீப்பும் கடந்த 2017ல் நடிகை கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைதாகி கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் சிறைவாசம் அனுபவித்தார். அந்த சமயத்தில் தான் அவர் நடித்திருந்த ராம்லீலா திரைப்படம் வெளியானது. திலீப்பின் மீது அப்போது இருந்த எதிர்மறை கருத்துக்களால் படம் ஓடாது என்று சொல்லப்பட்ட நிலையில் மிகப்பெரிய வெற்றியை பெற்று 100 கோடி வசூலித்து ஆச்சரியப்படுத்தியது. அதேபோல தற்போது சிறையில் இருக்கும் தர்ஷனுக்கும் திலீப்புக்கு நடந்தது போன்ற அதிர்ஷ்டம் டெவில் படத்தின் ரிலீஸில் கிடைக்குமா என்பது டிசம்பர் 11ஆம் தேதி தெரிந்துவிடும்..