ரத்தம் தெறிக்கும் டிசி படத்தின் டிரைலர் | கருப்பு படத்தில் முதல்வர் விஜய்க்கு நன்றி கார்டு | பூஜா ஹெக்டேவின் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகும் முதல் படம் | முதல் நாளே 10 கோடி வசூலை தாண்டிய ‛அதிரடி' திரைப்படம் | துரந்தர் 2 : ஓயே ஓயே பாடலுக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு | முதல்வர் விஜயை சந்தித்து கமல் வைத்த 6 கோரிக்கை | இந்நாள் முதல்வரையும், முன்னாள் முதல்வரையும் அடுத்தடுத்து சந்தித்த நாசர் | சம்பளம் பற்றி வெளிப்படையாகச் சொன்ன சனம் ஷெட்டி | கருப்பு : முதல் நாள் வசூல் எவ்வளவு ? | துரந்தர் 2 : ஓடிடி வெளியீடு இரண்டு வாரம் தள்ளி வைப்பு |

கடந்த சில தினங்களுக்கு முன்பு தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் போலா சங்கர் என்கிற படம் வெளியானது. அஜித் நடித்த வேதாளம் படத்தின் ரீமேக்காக உருவாகியிருந்த இந்த படத்தில் தமன்னா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்திருந்தனர். மெஹர் ரமேஷ் இயக்கியிருந்தார் இந்த படம் வெளியான முதல் நாளில் இருந்தே எதிர்பார்த்த வரவேற்பை பெற தவறி வசூல் ரீதியாக சரிவையும் சந்தித்தது. அதே நேரத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் வெற்றிகரமான வரவேற்பை பெற்றதால் போலா சங்கர் படம் பெரும் பின்னடைவை சந்தித்தது.
இந்த நிலையில் இந்த படத்தில் நடிப்பதற்காக தனக்கு பேசப்பட்ட 65 கோடி ரூபாய் சம்பளத்தை செட்டில் செய்யும்படி சிரஞ்சீவி கறாராக தயாரிப்பாளர் அனில் சுங்கராவிடம் பிடிவாதம் காட்டினார் என்றும், இதற்காக தனது சொத்து ஒன்றை பிணையாக வைத்து சிரஞ்சீயின் சம்பளத்தை தயாரிப்பாளர் அனில் சுங்கரா செட்டில் செய்தார் என்றும் ஒரு செய்தி கடந்த இரண்டு நாட்களாக சோசியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக தனது சோசியல் மீடியா மூலமாக பதிவிட்டுள்ள தயாரிப்பாளர் அனில் சுங்கரா கூறும்போது, “தற்போது ஆன்லைனில் இந்த படம் தொடர்பாக சுற்றி வரும் வதந்திகள் ஆதாரமற்றவை. அதில் ஒரு சதவீதம் கூட உண்மை இல்லை” என்று மறுத்துள்ளார்.