தனுஷ் 55ல் இணைந்தார் ஸ்ரீலீலா | போட்டோகிராபர் செய்த செயல் : கசப்பான அனுபவம் பகிர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ் | அட்லி, அல்லு அர்ஜுன் படப்பிடிப்பில் பிப்ரவரி முதல் இணையும் ஜான்வி கபூர் | ரஜினி 173வது படத்தின் கதை ஹாலிவுட் படத்தின் தழுவலா? | ஜூலையில் வெளியாகும் சூர்யா 46வது படம் | பெத்தி படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மிருணாள் தாக்கூர் | பிளாஷ்பேக் : இரவு காட்சிகளை பகலில் படமாக்கிய முதல் படம் | 2027 ஏப்ரல் 7 : வாரணாசி வெளியீட்டு தேதி அறிவிப்பு | கேரளா ஸ்டோரி இரண்டாவது பாகமும் பரபரப்பு கிளப்புகிறது | வேள்பாரி கதையில் நடிக்கப்போவது யார்? : ரஜினிக்கு கவுரவ வேடமா? |

மலையாளத்தில் மம்முட்டி நடிக்கும் அடுத்தடுத்த படங்கள் சீரான இடைவெளியில் ஒரு பக்கம் வெளியாகி கொண்டிருக்க இன்னொரு பக்கம் தொடர்ந்து புதிய படங்களின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார் மம்முட்டி. அந்தவகையில் மம்முட்டி தற்போது திரில்லர் படம் ஒன்றில் நடிக்கிறார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் டினோ டென்னிஸ் என்பவர் இயக்குகிறார். இவர் பிரபல மலையாள கதாசிரியர் கலூர் டென்னிஸின் மகன் ஆவார்.
எண்பதுகளில் துவங்கி பிரபலமான கதாசிரியராக வலம் வந்த கலூர் டென்னிஸ், மம்முட்டி மோகன்லால், சுரேஷ்கோபி ஆகியோரின் பல படங்களுக்கு கதை எழுதியவர். குறிப்பாக தயாரிப்பாளர்களின் முடிவுகளில் ஹீரோக்களின் குறுக்கீடு இருக்கக்கூடாது என்பதில் பிடிவாதமாக இருப்பவர் கலூர் டென்னிஸ். அதனாலேயே மம்முட்டி நடித்த இருபத்தி நான்கு படங்களுக்கு கதை எழுதிய இவர் ஒரு கட்டத்தில், கருத்து வேறுபாடு காரணமாக 12 வருடங்கள் மம்முட்டியிடம் இருந்து ஒதுங்கியே இருந்தார்.
இந்தநிலையில் இந்த கருத்து வேறுபாடுகளை மனதில் வைத்துக்கொள்ளாத மம்முட்டி அவரது மகனை தனது படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகப்படுத்துவது ஆச்சரியமான ஒன்று. இதேபோல சில வருடங்களுக்கு முன்பு பிரபல கதாசிரியர் ரெஞ்சி பணிக்கரின் மகனான நிதின் ரெஞ்சி பணிக்கர் என்பவரையும் கசபா என்கிற படத்தின் மூலம் இயக்குனராக மம்முட்டி அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.