அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
பாலிவுட்டில் ராய் கபூர் குடும்பத்தை சேர்ந்த நடிகர்களில் ஒருவர் ஆதித்ய ராய் கபூர். பிரபல தயாரிப்பாளரும் ராய் கபூர் பிலிம்ஸ் நிறுவனருமான சித்தார்த் ராய் கபூரின் சகோதரர் இவர். தொடர்ந்து பல படங்களில் இவர் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் மும்பை பாந்த்ராவில் இவர் வசிக்கும் வீட்டிற்கு இவரை பார்ப்பதற்காக துபாயை சேர்ந்த பெண் ஒருவர் வந்துள்ளார். அந்த சமயம் ஆதித்யா ராய் கபூர் வீட்டில் இல்லாததால் வீட்டில் இருந்த பணிப்பெண் உள்ளே இருந்தபடியே அந்தப் பெண்ணிடம் தகவல் கூறியுள்ளார்.
ஆனாலும் தான் ஆதித்ய ராய் கபூருக்கு சில உடைகளையும் பரிசு பொருட்களையும் கொண்டு வந்துள்ளதாக கூறியதை தொடர்ந்து அந்த பணிப்பெண் அவரை உள்ளே அனுமதித்துள்ளார். அது மட்டுமல்ல ஆதித்ய ராய் கபூர் தன்னை 6:00 மணிக்கு சந்திப்பதாக நேரம் ஒதுக்கி இருந்தார் என்றும் கூறினார். சிறிது நேரம் கழித்து மாலை ஆதித்யராஜ் வீடு திரும்பிய போது அங்கே அமர்ந்திருந்த பெண்ணை பார்த்து அவர் யார் என்றே தனக்கு தெரியாது என கூறினார்.
இதனை தொடர்ந்து பணிப்பெண்ணும் வீட்டில் இருந்தவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். அந்தப்பெண் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதும் மும்பை போலீசார் அவரை கைது செய்து காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் நடிகர் சல்மான் கானை இரண்டடுக்கு பாதுகாப்பையும் மீறி சந்திக்க முற்பட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.