‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

2014ல் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் பெங்களூர் டேய்ஸ். அஞ்சலி மேனன் இயக்கிய இந்த படத்தில் துல்கர் சல்மான், நிவின்பாலி, பஹத் பாசில், நஸ்ரியா, பார்வதி, நித்யா மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப்படம் தமிழிலும் பெங்களூரு நாட்கள் என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது.
இந்த நிலையில் எட்டு ஆண்டுகள் கழித்து இந்த படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. இரட்டை இயக்குனர்களான ராதிகா ராவ் மற்றும் வினய் சப்ரூ இருவரும் இணைந்து இயக்க உள்ளனர். இந்த படத்திற்கு யாரியான் 2 என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக சரியாக பெங்களூர் டேய்ஸ் படம் வெளியான அதே 2014ல் ஹிந்தியில் யாரியான் என்கிற படம் வெளியானது. அந்த படம் கல்லூரி நண்பர்கள் சிலர் கல்லூரி காலத்திற்கு பிறகு தங்களது வாழ்க்கைப் பயணத்தில் எப்படி அடி எடுத்து வைக்கின்றனர் என்பது பற்றி உருவாக்கப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட அதே பாணியிலான ஒரு கதையம்சம் கொண்ட படமாக பெங்களூர் டேய்ஸ் இருப்பதால் அந்த படத்தின் இரண்டாம் பாகமாக இதை இயக்க முடிவு செய்தார்களாம் இந்த படத்தின் இயக்குனர்கள்.
இந்த படத்தில் கதாநாயகிகளில் ஒருவராக புருவ அழகி என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் பிரியா பிரகாஷ் வாரியர் நடிக்க இருக்கிறார். இன்னொரு கதாநாயகியாக மலையாள திரையுலகின் இளம் நடிகையான அனஸ்வர ராஜன் நடிக்கிறார் என்கிற தகவலும் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ஹிந்தியில் ஸ்ரீதேவி பங்களா மற்றும் லவ் ஹேக்கர்ஸ் என 2 படங்களில் நடித்துவிட்ட பிரியா வாரியர் நடிக்கும் மூன்றாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 2023 மே மாதம் இந்தப்படம் வெளியாகும் என கூறப்படுகிறது.




