சுள்ளான் நடிகருக்குள்ளும், ஒரு இயக்குனர் இருப்பதால், தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களின் கதைகளை பிரித்து மேய்ந்து விடுகிறார். இதனால், கதையை பூ மாலையாக எடுத்து வருவோர், திரும்பும்போது, பூவே இல்லாமல் நாரோடு தான் திரும்புகின்றனர். அந்த அளவுக்கு, கருத்து சொல்கிறேன் என, கதைகளை கந்தலாக்கி விடுகிறார், நடிகர். இதனால், புது வரவு இயக்குனர்கள், நடிகரின் பெயரை சொன்னாலே, மிரண்டு ஓடுகின்றனர்.
30 மார், 2019 - 00:00
அகர்வால் நடிகையின் பட வாய்ப்புகளை அபகரித்து வருகிறார், அடங்கமறு நாயகி. இதனால், புதிய படங்கள் கையிருப்பு இல்லாமல் தடுமாறி வரும் அகர்வால் நடிகை, சமீபத்தில் ஒரு படப்பிடிப்பு தளத்தில், அடங்கமறு நடிகையிடம், 'என்னுடன் நடிக்கும் கதாநாயகர்களை கைக்குள் போட்டு, 'மார்க்கெட்'டை, அபகரித்து வருகிறாயே...' என்று எகிறி பேச, இரண்டு அம்மணிகளுக்கும் இடையே குடுமிபுடி சண்டையாகி விட்டதாம். நீண்டநேர மோதலுக்குப் பின், அம்மணிகளை பிரித்து விட்டிருக்கின்றனர், படக்குழுவினர்.
30 மார், 2019 - 00:00
தன்னுடன் நடித்த பாலிவுட் நடிகையை, திருமணம் செய்து கொண்டார், 'பிக்கப்' நடிகர். ஆனால், பல ஆண்டுகளாக பல நடிகையரின், ஆண் நண்பராக இருந்து வந்துள்ள மேற்படி நடிகர், பெண் நண்பிகளுடன் நட்பை இனியும் தொடர்ந்தால், குடும்பத்தில் குழப்பம் வந்து விடும் என்பதால், அவர்களை கத்தரித்து வருகிறார்.
23 மார், 2019 - 00:00
ஆபாச பட நடிகையான அந்த பாலிவுட் புயல், தற்போது, தமிழில் ஒரு சரித்திர படத்தில், கதையின் நாயகியாக நடிப்பதுடன், சில படங்களில், கவர்ச்சி நடனம் ஆடவும் கல்லெறிந்தார். அம்மணிக்கான ரசிகர்களை கருத்தில் வைத்து, அவரை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் முண்டியடித்த போது, ஒரு பாட்டுக்கு குத்து போடவே, கதாநாயகியரை விட கூடுதல் கரன்சி கேட்டார். இதனால், அம்மணியை முற்றுகையிட்ட படாதிபதிகள், தெறித்து ஓடி விட்டனர்.
23 மார், 2019 - 00:00
தளபதி நடிகர், தற்போது நடித்து வரும், புதிய படத்திற்காக போடப்படும் சில அரங்கங்களை யாரோ படம்பிடித்து, 'சோஷியல் மீடியா'வில் போட்டு விட்டனர். அதிர்ச்சியடைந்த படக்குழு, இதுகுறித்து விசாரித்தபோது, தளபதியுடன் பாதுகாப்பு படையில் இருந்தவர்கள் தான் இந்த வேலையை செய்தது தெரிந்தது. அதனால், வேலியே பயிரை மேய்ந்த கதையாகி விட்டதை நினைத்து, வருந்திய தளபதி, தன் பாதுகாப்பு படைத்தளபதிகளை கூண்டோடு நீக்கி, புதியவர்களை நியமித்துள்ளார்.
16 மார், 2019 - 00:00
பால் நடிகை, சுள்ளான் நடிகருடன் அதிக நெருக்கம் காட்டி, அவரது, 'இமேஜை' கெடுத்து விட்டதை அடுத்து, மேற்படி நடிகை வருகிறார் என்றாலே, திருமணமான நடிகர்கள் ஓடி ஒளிகின்றனர். இதனால், தன், வழியை மாற்றியிருக்கும் நடிகை, வேகமாக வளர்ந்து வரும், இளவட்ட நடிகர்களுக்கு கல்லெறிந்து வருகிறார். அதிலும், தனக்கு வளைந்து கொடுக்கும் நபர்கள் என்று தெரிந்தால், 'வீக் எண்ட் பார்ட்டி'க்கு அழைப்பு விடுகிறார். நடிகையின் இந்த, 'சீக்ரெட் பார்ட்டி' விவகாரம், கோலிவுட்டில் கசிந்ததை அடுத்து, இளம் நடிகர் பட்டாளம், அம்மணியை முற்றுகையிட்டு வருகிறது.
16 மார், 2019 - 00:00
தான் நடிக்கும் படங்களில் ஆபாசமாக தோன்றி வரும் அந்த, 'லிப்லாக்' நடிகை, சமீபத்தில், ஒரு கல்லுாரி விழாவுக்கும், படு ஆபாசமாக உடையணிந்து சென்றிருக்கிறார். இதனால், அம்மணியை பார்க்க, இளைஞர் படை கூடியிருக்கிறது. அவரது, ஆபாச புகைப்படம் சமூக வலைதளத்தில், வெளியானதை பார்த்த, 'நெட்டிசன்'கள், அம்மணியை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இதனால், அவர்கள் அளவுக்கு இறங்கி சென்று, தானும் பதிலுக்கு பதில் ஆபாச வார்த்தைகளால், அவர்களை திட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறார், நடிகை.
02 மார், 2019 - 00:00
மெரினா நடிகர் நடித்த சில படங்கள், தோல்வி அடைந்ததை அடுத்து, மார்க்கெட்டை பிடிக்கும் உத்வேகத்தில் இறங்கியிருக்கிறார். அதோடு, மெகா நடிகையருடன் ஜோடி சேர்ந்து, தன் மார்க்கெட்டை, 'ஸ்டெடி' செய்ய வேண்டும் என்பதற்காக, தாரா நடிகையை, ஒரு படத்திற்கும், ஸ்பைடர் நடிகையை, இன்னொரு படத்திற்கும் ஒப்பந்தம் செய்ய விரும்பினார். ஆனால், மேற்படி அம்மணிகள், பெரிய சம்பளம் கேட்க, அதற்கு தயாரிப்பாளர்கள் தயங்கியபோது, தன் சார்பில் ஒரு தொகையை அவர்களுக்கு, 'வெட்டி' அந்த படங்களில் ஒப்பந்தம் செய்துள்ளார், நடிகர்.
02 மார், 2019 - 00:00
பீட்சா நடிகருடன் நடித்த படம், வெற்றி பெற்றதை அடுத்து, ஏராளமான கதைகள் கேட்ட மூனுஷா, அதில் ஒரு கதையை கூட, ஓ.கே., செய்யவில்லை. ஒவ்வொரு கதைகளிலுமே குற்றம், குறைகளை கண்டுபிடித்து, 'ரிஜெக்ட்' செய்து வருகிறார். இதனால், அதிர்ச்சியடைந்த இயக்குனர்கள், மூனுஷாவின் பெயரை, கோலிவுட்டில், 'டேமேஜ்' செய்து வருகின்றனர்.
02 பிப், 2019 - 00:00
வேகமாக முன்னேறி வந்த மெரினா நடிகருக்கு, அடுத்தடுத்து இரண்டு படங்கள், அதிர்ச்சி தோல்வியை கொடுத்து விட்டன. அதனால், தற்போது நடித்து வரும் படங்களை வெற்றிப்படமாக கொடுத்து, மார்க்கெட்டை தக்க வைக்க மெனக்கெடும் அவர், கதை விஷயத்தில் கூடுதலாகவே மூக்கை நுழைக்கிறார். அடிக்கடி எல்லை மீறுவதால், அவ்வப்போது படப்பிடிப்பு தளங்களில் நடிகருடன், இயக்குனர்கள் மீசையை முறுக்குகின்றனர். மெரினா நடிகரின் இந்த போக்கு, இயக்குனர்கள் வட்டாரத்தில், புகைச்சலை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
02 பிப், 2019 - 00:00
மூன்றெழுத்து நட்பு நடிகை, பழைய ஞாபகத்தில், தன்னிடம் கதை சொல்ல வந்த இயக்குனர்களிடம், துருவி துருவி கதை கேட்டதோடு, 'என்னை, 'டம்மி' பண்ணினால் நடப்பதே வேறு...' என்று, எச்சரிக்கும் தொனியில் பேசி வந்தார். இதனால், அம்மணியின் வீட்டுப் பக்கம், சினிமா வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் கூட செல்லவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த நடிகை, இன்னும் சில காலம் போனால் முழுவதுமாக தன்னை ரசிகர்கள் மறந்து விடுவர் என்று, தற்போது, சில இளவட்ட இயக்குனர்களுக்கு போன் செய்து, 'நீங்களாக பார்த்து என்ன வேடம் கொடுத்தாலும் நடிக்கிறேன். எனக்கு ஆதரவு கொடுங்கள்...' என்று, தேனொழுக இனிக்க இனிக்க பேசி, சினேகம் வளர்த்து வருகிறார்.
26 ஜன, 2019 - 00:00
பரோட்டா காமெடியனின் மார்க்கெட்டை வீழ்த்தி, உச்ச காமெடியனாகி விட்டார், பரட்டைத் தலை காமெடியன். மேலும், பரோட்டாவை சுத்தமாக, 'வாஷ் - அவுட்' செய்து விட வேண்டும் என்று, அவருக்கு செல்லவிருக்கும் ஓரிரு படங்களையும், குறைந்த சம்பளத்தில் நடித்துத் தருவதாக சொல்லி, தன் பக்கம் இழுத்து வருகிறார். இதனால், அதிர்ச்சியடைந்த பரோட்டா காமெடியன், பரட்டைத் தலைக்கு தக்க பாடம் கற்பிக்க வேண்டுமென்று, சில முன் வரிசை ஹீரோக்களுடன் நட்பு வளர்த்து, பதிலடி கொடுக்கும் திரைமறைவு வேலைகளில் தீவிரமடைந்திருக்கிறார்.