மணியானவரின் கனவு படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க தாரா நடிகையிடம் பேசினர். ஆனால், அவரோ அந்த படத்தில் நடிக்கும் ஹீரோக்களுக்கு இணையாக சம்பளம் கேட்டதால் அதிர்ந்து விட்டார் மணியானவர். பேச்சு இழுபறியில் இருந்தபோத, இந்த சேதி இஞ்சி இடுப்பழகி நடிகையின் காதுகளை எட்டியது. விளைவு, மின்னல் வேகத்தில் சென்னை வந்து 'பாக்கெட் மணி கொடுத்தாலும் போதும் நான் நடிக்கிறேன். உங்கள் படத்தில் நடிக்க வேண்டும் என்பது என் கனவு...' என்று சொல்லி வலுக்கட்டாயமாக மணியானவரின் படத்தில் தன்னை திணித்துக் கொண்டார். 'சம்பள பிரச்னை முடிவுக்கு வருவதற்குள் இந்த நடிகை குறுக்கு சால் ஓட்டி, ஆட்டத்தை கலைத்து விட்டாரே...' என்று, இஞ்சி இடுப்பழகி மீது, கொல வெறியில் இருக்கிறார் தாரா நடிகை.
11 மே, 2019 - 00:00
இயக்குனர்களின் பணிகளில் குறுக்கீடு செய்து கெட்ட பெயரை எடுத்த வம்பு நடிகர் மீது தொடர்ந்து புகார் எழுந்ததால் சில காலம் வாலை சுருட்டி வைத்திருந்தார். இப்போது மறுபடியும் அவர் வேலையை காட்டுவதாக புலம்புகின்றனர் இயக்குனர்கள். குறிப்பாக, காட்சி தாள்களை வாங்கிப் பார்த்து அதில் இயக்குனர் சொல்வது போன்று நடிக்காமல் தனக்கு தோன்றுவதை நடிக்கிறார். இதனால், வம்பு மீது கோலிவுட்டில் மறுபடியும் அதிருப்தி நிலவத் துவங்கியிருக்கிறது.
11 மே, 2019 - 00:00
ஓவியமான நடிகையின் ஆபாச அட்டகாசம் அதிகரித்து வருகிறது. ஆனால், இந்த பரபரப்பை பயன்படுத்தி, 'நம்பர் ஒன்' நடிகர்களுடன் கலக்கல் ஆட்டம் போட துடிக்கும் நடிகை, அவர்களை எங்கு பார்த்தாலும், தன் ஆட்டம் போடும் ஆசையை அவிழ்த்து விடுகிறார். அதேசமயம், கதாநாயகியாக நடிப்பதற்கு கேட்கும் சம்பளத்திற்கு இணையாக, ஒரு பாட்டுக்கு ஆடவும் அம்மணி கேட்பதால், அவரை நெருங்கவே தயங்குகின்றனர், தயாரிப்பாளர்கள்.
04 மே, 2019 - 00:00
பாலிவுட்டில் படம் இயக்கும் வாய்ப்புகள் இல்லாததால், கோலிவுட்டுக்கு, மீண்டும் நடிக்க வந்தார் நடன சூறாவளி. ஆனால், தற்போது அங்குள்ள பிரபல மான் நடிகரை வைத்து ஒரு படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்ததும், தான் நடித்து வந்த சில படங்களை அப்படியே போட்டு, மும்பைக்கு பறந்து விட்டார். இதனால், அவரை வைத்து படமெடுத்த தயாரிப்பாளர்கள் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர்.
04 மே, 2019 - 00:00
'தல நடிகரை வைத்து அடுத்தபடியாக படம் இயக்கி விடவேண்டும்...' என்று, அவரிடம் ஏற்கனவே கதை சொன்ன நான்கு இயக்குனர்களும், 'கால்ஷீட்' கேட்டு துரத்தி வருகின்றனர். தர்மசங்கடத்தில் சிக்கிய நடிகரோ, 'நீங்கள் நான்கு பேர் சொன்ன கதைகளையும், என் கதை இலாகாவிடம் சொல்லி, எந்த கதையில் முதலில் நடிக்க சொல்கின்றனரோ, அவர்களுக்கே, என் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை தருவேன்...' என்று, கறாராக கூறியிருக்கிறார். இதனால், அவரிடம் கதை சொல்லியிருக்கும், 'சீனியர்' இயக்குனர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
27 ஏப், 2019 - 00:00
தாரா நடிகை, கதையின் நாயகியாக நடித்த படங்கள் தோல்வியடைந்து வருவதால், 'ஹீரோக்களின் படங்களில் நடித்தாவது, மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்வோம்...' என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். அதனால், உச்ச நடிகர் மற்றும் தளபதி நடிகருடன் நடிக்கும் நடிகை, கதையின் நாயகிக்கான கதைகளை தற்காலிகமாக ஓரங்கட்டி, 'டூயட்' பாடுவதில் ஆர்வத்தை திருப்பியுள்ளார்.
27 ஏப், 2019 - 00:00
ஆரம்பத்தில் சில படங்கள் கொடுத்த வெற்றி காரணமாக, நடிப்பில் முழு கவனம் செலுத்தினார், டார்லிங் நடிகர். அதன் பின் நடித்த படங்கள், தொடர்ந்து தோல்வியை தழுவியதால், தற்போது, இசையிலும் கவனத்தை திருப்பியிருக்கிறார். ஒருவேளை, நடிப்பு கை கொடுக்கவில்லை என்றால், இசையாவது காப்பாற்றும் என்று, மறுபடியும் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்க, வாய்ப்பு கேட்டு வருகிறார்.
22 ஏப், 2019 - 00:00
சமீபத்தில், பாலிவுட் நடிகையை திருமணம் செய்து கொண்டார், பிக் - அப் நடிகர். ஆனபோதும், நடிகர், 'பிக்-அப்'பில் மன்னர் என்பதால், அவரது லீலைகள், மனைவியின் காதுகளை எட்டத் துவங்கியது. இதனால், குடும்பத்தில் குழப்பம் ஏற்படாமல் இருக்க, அபிமானத்திற்குரிய அம்மணிகளை, அடக்கி வாசிக்குமாறு கெஞ்சிக் கேட்டு வருகிறார், நடிகர்.
22 ஏப், 2019 - 00:00
உடல் பெருத்துப்போன ருத்ரம்மா தேவி நடிகை மாதக்கணக்கில் 'ஜிம்'மில் மல்லுக்கு நின்றும் அவரது உடம்பு இளைக்கவில்லை. ஆன போதும், 'கிராபிக்சில்' தன்னை, 'ஸ்லிம்' ஆக்கி படம் வெளியிட்டு, இயக்குனர்களை தன் பக்கம் இழுத்தார். அதையடுத்து, அவரை நேரில் பார்த்தவர்கள், பழையபடி, அப்படியே இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து, 'இந்த ஏமாற்று வேலையெல்லாம் எங்ககிட்ட வேண்டாம்...' என்று, நடிகையை மீண்டும் கதாநாயகியாக்க மறுத்து விட்டனர். அதனால், இப்போது வேறு வழியில்லாமல், குணசித்திர வேடத்தில் நடிக்க, வழியை மாற்றியுள்ளார், நடிகை.
13 ஏப், 2019 - 00:00
சரியான பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும், உலக நடிகரின் மகள், தந்தையின் கட்சியில் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்தார். ஆனால், உலக நடிகரோ, 'நானே நடிகன், என் கட்சியில், மேலும் நடிகர் - நடிகையரை சேர்த்தால், நட்சத்திர கூட்டம் என்று மற்ற கட்சியினர் கிண்டல் செய்வர். அதனால், இப்போதைக்கு அந்த மாதிரி, 'ரிஸ்க்' எடுக்க நான் தயாராக இல்லை...' என்று, மகளின் ஆசைக்கு, முட்டுக்கட்டை போட்டு விட்டார்.
13 ஏப், 2019 - 00:00
உச்ச நடிகரின் புதிய படத்தின் படப்பிடிப்பு, அடுத்த மாதம் நடக்க இருந்தது. ஆனால், இது தேர்தல் நேரம் என்பதோடு, நடிகரை ரொம்பவே எதிர்பார்த்த கட்சியினருக்கு, தன் ஆதரவை தெரிவிக்கவில்லை. இதனால், அவரை ஏதாவது ஒரு விதத்தில் சிக்க வைக்க, கங்கணம் கட்டி திரிகின்றனர், கட்சியினர். அதன் காரணமாக, தன் படத்தின் படப்பிடிப்புக்கு பணம் எடுத்து செல்லும்போது, ஏதாவது சிக்கலில் சிக்க வைத்து விடுவர் என்று உஷாராகிய நடிகர், தேர்தலுக்கு பின் படப்பிடிப்பை வைத்துக் கொள்ளலாம் என்று, தள்ளி வைத்து விட்டார்.
06 ஏப், 2019 - 00:00
ஒரு பட விழாவில், தாரா நடிகையை மிக மட்டமாக விமர்சித்து பேசிய, 'மாஜி' வில்லனுக்கு, திரையுலகில் எதிர்ப்பு வலுத்துள்ளது. ஏற்கனவே, சண்டக்கோழியுடன் மல்லுக்கு நின்றவர் இவர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நடிகருக்கு கண்டனம் தெரிவித்துள்ள, சண்டக்கோழி, மேற்படி வில்லனுக்கு, 'ரெட் கார்டு' போடுவதற்கான சூழலை உருவாக்கி வருவதாக, கோலிவுட்டில் கிசுகிசுக்கின்றனர்.