இரண்டெழுத்து படத்தில் நடித்துள்ள பிரேமம் நடிகை, படப்பிடிப்பு தளத்தில், காட்சியை அப்படி மாற்றுங்கள், இப்படி மாற்றுங்கள் என்று இயக்குனருக்கு ஏகப்பட்ட, 'டார்ச்சர்' கொடுத்து விட்டார். இதனால், நடிகையால், பெரும் தலைவலிக்கு ஆளான இயக்குனர், அந்த நடிகையை பற்றி தன்னிடம் விசாரிக்கும் இயக்குனர்களிடம், 'நல்ல நடிகை தான்; ஆனா, கதையை மட்டும் பிரிச்சு மேஞ்சிடுவாரு...' என்று சொல்ல, இதனால், தங்கள் படங்களுக்கு, 'புக்' பண்ண நினைத்திருந்த சில இயக்குனர்கள், எகிறி குதித்து ஓடுகின்றனர்.
23 மார், 2018 - 00:00
உச்ச நடிகருடன், மூன்றெழுத்து படத்தில் நடித்த மும்பை நடிகையை, வேறு சில இளவட்ட நடிகர்களின் படங்களில் நடிக்க வைக்க முயற்சிகள் நடந்தது. ஆனால், நடிகையோ, உச்ச நடிகருடன் நடித்த பின், வளர்ந்து வரும் நடிகர்களுடன் நடித்தால், 'இமேஜ்' போய் விடும் என்று சொல்லி, அப்படங்களை தவிர்த்து விட்டார். அத்துடன், முதல் தர வரிசையில் இருக்கும் நடிகர்களுடன் நடிப்பதற்காக தற்போது தீவிர பட வேட்டையை முடுக்கி விட்டுள்ளார்.
10 மார், 2018 - 00:00
இதுவரை, இயக்குனர்கள் சொல்வதை போலவே நடித்து வந்த பையா நடிகை, சமீபகாலமாக, அவர்கள் சொல்லும் காட்சியை, தன் பாணிக்கு மாற்றி நடிக்கிறார். இதனால், படப்பிடிப்பு தளங்களில் இயக்குனர்களுக்கும், நடிகைக்குமிடையே மோதல் வெடித்து வருகிறது. நடிகையின் இந்த போக்கு தொடர்வதால், சில இயக்குனர்கள், நடிகை மீது அதிருப்தியடைந்து, அவரைப் பற்றி தவறான கருத்துகளை சினிமா வட்டாரங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
10 மார், 2018 - 00:00
சமீபத்தில் வெளியான ஒரு படத்தின் இயக்குனர், தன் கேரக்டரை, 'டம்மி' பண்ணி விட்டதாக புகார் அளித்திருந்தார், சினேகமான நடிகை. அதன் காரணமாக, அடுத்தபடியாக அவரை, 'புக்' பண்ணயிருந்த சில இயக்குனர்கள் பின் வாங்கி விட்டனர். விஷயமறிந்த நடிகை, அதிர்ச்சியடைந்து, 'இனிமேல் யாரையும் குறை சொல்ல மாட்டேன்...' என்று ஜகா வாங்கி, அந்த இயக்குனர்களுக்கு மீண்டும் மீண்டும் போன் செய்து, வாய்ப்பு கேட்டு வருகிறார்.
06 பிப், 2018 - 00:00
படையப்பா நடிகையின் மார்க்கெட் உச்சத்தில் இருந்தபோதிலும், சில படப்பிடிப்பு தளங்களில் அவருக்கான மரியாதை குறைவாக இருந்து வருகிறதாம். அதனால், கடுப்பான நடிகை, 'நான் மாஜி கதாநாயகி தான்; ஆனால், மார்க்கெட்டில் மவுசு உள்ள நடிகை. அதனால், எனக்கும் கதாநாயகர்களுக்கு இணையான கவனிப்பு இருக்க வேண்டும். அதில் ஏதேனும் குறை இருந்தால், வீட்டிற்கு போய் விடுவேன்...' என்று தயாரிப்பாளர்களை பயமுறுத்தி வைத்திருக்கிறார்.
06 பிப், 2018 - 00:00
மூனுஷா நடிகையுடன், நெருக்கமான நட்பு வளர்த்து வந்த ஒரு தொழிலதிபர், திடீரென்று ஒருநாள் காதல் அம்பு தொடுத்தாராம். ஆனால், நடிகையோ, அதற்கு மசியவில்லை. 'இந்த மாதிரி பல அம்புகளை பார்த்து விட்டேன்; யார் மனதிலும் உண்மையான காதல் இல்லை. எல்லாருமே போலியான மனிதர்கள்...' என்று சொல்லி, அந்நபரின் காதலை உடனடியாக கத்தரித்து விட்டார்.
06 ஜன, 2018 - 00:00
வாசனை காமெடியன் நாயகனாக நடித்துள்ள ஒரு படத்தில், சூப்பர் நடிகரை மறைமுகமாக கிண்டல் செய்வது போன்று, ஒரு காட்சியில் நடித்துள்ளார். ஆனால், அந்த காட்சியுடன் படம் வெளியானால், சூப்பர் நடிகரின் ரசிகர்கள் கொந்தளித்து விடுவர் என்று சிலர் வாசனை காமெடியனை எச்சரித்தனர். ஆனாலும், 'இன்றைக்கு அந்த மாதிரி யாரையாவது, 'அட்டாக்' பண்ணினால் தான் படம் ஓடும்; அதனால், அந்த காட்சியை நீக்கப்போவதில்லை...' என்று பிடிவாதமாக கூறி வருகிறார், நடிகர்.
23 டிச, 2017 - 00:00
தளபதி நடிகரின் நான்கெழுத்து படம், அரசியல் சர்ச்சையில் சிக்கியபோதும், அவரது அடுத்த படத்திலும் அரசியல், 'அட்டாக்' இடம் பெறுகிறது. ஆனால், தொடர்ந்து ஆளும் கட்சிக்கு எதிராக குரல் கொடுத்தால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்படும் என்பதால் அடுத்த படத்தில் பொதுவான அரசியலை பேசப் போகிறாராம், தளபதி நடிகர்.
23 டிச, 2017 - 00:00
தான் இயக்கி, நடித்த படம் தோல்வியடைந்ததால், இனிமேல் நாயகனாக நடிக்கப் போவதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளார், கனியானவர். அதேசமயம், தொடர்ந்து குணசித்திர நடிகராக பயணிக்க விரும்பும் அவர், அழுத்தமான கதாபாத்திரங்கள் என்றால் சம்பள விஷயத்தில் கெடுபிடி செய்யாமல் அந்த வாய்ப்பை ஏற்றுக்கொள்கிறார்.
09 டிச, 2017 - 00:00
லண்டன் பாய் பிரண்டுடன் படப்பிடிப்பு தளங்களுக்கு விசிட் அடிக்கும் மதராசப்பட்டினம் நடிகை, ஸ்பாட்டிலேயே பாய் பிரண்டுகளுடன் லுாட்டி அடிப்பதால், சில இந்திப்பட இயக்குனர்கள், பாய் பிரண்டுடன் ஸ்பாட்டுக்குள் வருவதற்கு நடிகைக்கு தடை விதித்துள்ளனர்.
02 டிச, 2017 - 00:00
கதைக்கு அவசியப்பட்டால் கூட கிளாமராக நடிக்க மாட்டேன் என்று கடும் கண்டிஷன் போட்டு, நடித்து வரும் மலர் டீச்சர் நடிகை, திருமணமான நடிகர் ஒருவருடன் நெருங்கி பழகி வருவதாக ஒரு செய்தி பரவியுள்ளது. இதுபற்றி எந்தவித பதிலும் சொல்லாமல் மவுனம் சாதிக்கிறார், நடிகை.
02 டிச, 2017 - 00:00
அட்டகத்தி நடிகைக்கு புதிதாக படவாய்ப்புகள் இல்லை. அதனால் சில தயாரிப்பாளர்களை சந்தித்து கேரக்டர் வேடங்களில் நடிக்க, 'சான்ஸ்' கேட்டு வருகிறார். அத்துடன், இதுவரை பெங்களூரில் இருந்து சென்னை வரும்போதெல்லாம் சில பாடிகார்டுகளுடன் விசிட் அடித்தவர், இப்போது தன்னந்தனியாக வந்து ரகசிய சந்திப்புகளை நிகழ்த்தி, படவேட்டை நடத்துகிறார்.