ஜெயமான நடிகருடன் இணைந்துள்ள, 'இனிப்பு கடை' நடிகை, இந்த படத்தில் ஒரு மழை சீனில் நடிக்கிறார். அதற்காக, கொஞ்சம் கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்று சொன்னபோது, துளியும் தயங்காமல், 'ஓகே' சொன்ன நடிகை, மேல்தட்டு நடிகர்களின் படங்களில், அயிட்டம் நடிகைகள் ரேஞ்சுக்கு, 'குத்து' நடிகையாகவும் நடிக்க, தான் தயாராக இருப்பதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.
29 செப், 2018 - 00:00
வாசனை காமெடியன் நாயகனாக நடித்த சில படங்கள் வெற்றி பெற்ற நிலையில், தற்போது அவர் நடித்துள்ள படங்கள் திரைக்கு வரமுடியாத நிலையில் சிக்கியுள்ளன. இதனால், 'காமெடியனாக நடித்த போது, வாரத்திற்கு ஒரு படம் வெளியானது. இப்போது, ஆண்டுக்கு ஒரு படம் வெளியாவதே சிரமமாகி விட்டது. இப்படியே போனால், ரசிகர்கள் என்னை மறந்து விடுவர் போலிருக்கே...' என்று புலம்பித் திரிகிறார், நடிகர்.
29 செப், 2018 - 00:00
மும்பையில் இருந்து வந்திருக்கும் வனமகன் நடிகை, கோலிவுட்டின் நம்பர் ஒன் நாற்காலியில் அமர வேண்டுமென்று வரிந்து கட்டியுள்ளார். அதற்கு, மேல்தட்டு நடிகர்களின் அரவணைப்பு அவசியம் என்பதால், அவர்களுடனான அறிமுகத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ள நடிகை, அவ்வப்போது மொபைலில் அவர்களுடன் கடலை போடுகிறார். அத்துடன், தன் வார்த்தைக்கு வசப்படும் நடிகர்களை, 'கரெக்ட்' பண்ணி, புதிய படங்களுக்கு, 'ரூட்' போடுகிறார்.
22 செப், 2018 - 00:00
வம்பு நடிகரின் ஜாதகப்படி, இப்போது பெண்களுடன் நட்பு வளர்ப்பது அவப்பெயருக்கு வழிவகுக்கும் என்று கூறியுள்ளார், ஜோதிடர். அதனால், பார்ட்டி மற்றும் விழாக்களில் பங்கேற்பதை தவிர்த்து வருகிறார். முக்கியமாக, யாரேனும் வில்லங்கமான நடிகைகள் அதே நிகழ்ச்சிகளுக்கு வருகின்றனர் என்றால், பிரச்னை தன்னைத்தேடி வருவதாக சொல்லி, தெறித்து ஓடுகிறார்.
22 செப், 2018 - 00:00
அம்மாவுக்கு கோவில் கட்டிய காஞ்சனா நடிகருக்கு, எதிர்காலத்தில் அரசியலில் பிரவேசிக்கும் ஆசை உள்ளது. அதனால், உச்ச நடிகர் கட்சி ஆரம்பித்தால், அதில் தன்னையும் இணைத்துக் கொள்ள நினைக்கிறார். அதன் காரணமாக, உச்ச நடிகரை சந்தித்து, 'நீங்கள் கட்சி ஆரம்பிக்கும்போது நான்தான் உங்கள் கட்சியின் பிரசார பீரங்கியாக செயல்படுவேன்...' என்று இப்போதே நச்சரித்து வருகிறார்.
08 செப், 2018 - 00:00
ஒரு நாள் கால்ஷீட்டுக்கு, 5 லட்சம் ரூபாய் கேட்டு தயாரிப்பாளர்களை அதிர்ச்சியடைய வைத்தவர், புரோட்டா காமெடியன். ஆனால், சமீபகாலமாக அவருக்கு அதிர்ச்சி கொடுக்க, சில காமெடியன்கள் மார்க்கெட்டுக்கு வந்து விட்டனர். இதனால், புரோட்டாவின் மார்க்கெட் ஆட்டம் கண்டுள்ளது. அதன் காரணமாக, தன்னை தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியாக, தற்போது, நாள் சம்பளம் பேசுவதை தவிர்த்து, மொத்த கூலி பேசி வருகிறார்.
08 செப், 2018 - 00:00
மார்க்கெட் உச்சத்தில் இருந்த போது, படப்பிடிப்பு தளத்தில் சின்ன குறைபாடு இருந்தாலும், கத்தி ஊரைக் கூட்டுவார், அந்த நடிகை. இப்போது, மார்க்கெட், 'டல்'லாகி விட்டதால், தன் சம்பளத்தைக் கூட, கோடிகளில் இருந்து லட்சத்துக்கு இறக்கி விட்டதுடன், முன்பு நரைமுடி இயக்குனர்கள், நடிகர்களை தவிர்த்து வந்த நடிகை, கோலிவுட்டில் நீண்ட காலம் கோலோச்ச வேண்டும் என்பதற்காக, அவர்களை தேடிச் சென்று கைகுலுக்கி, நட்பு வளர்த்து வருகிறார்.
25 ஆக, 2018 - 00:00
தன் மார்க்கெட் தள்ளாடுவதால், ஒட்டுமொத்தமாக சரிந்து விடக் கூடாதே என்று, சில இளவட்ட நடிகர்களின் தோள் சாய்ந்துள்ளார், அந்த நடிகை. அத்துடன், தற்போது இருக்கும் நிலையில், அவர்களின் அரவணைப்பும், ஆதரவும் அவசியம் தேவை என்று நினைப்பதால், முன்னணி நடிகர்களுக்கு இணையாக, மேற்படி நடிகர்களுடன் தாராள நெருக்கம் காட்டி நடித்து வருகிறார்.
25 ஆக, 2018 - 00:00
திருமணமே வேண்டாம்; கடைசி வரை சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கவே ஆசைப்படுகிறேன் என்று கூறும், மாமி நடிகை, அடிக்கடி வெளிநாடுகளுக்கு, 'டூர்' அடித்து, அங்குள்ள பாய் பிரண்டுகளுடன், 'ஜாலியோ ஜிம்கானா' பாடி வருகிறார். அதேசமயம், தன் முகம், மொபைல் கேமராக்களில் பதிவாகி விடக்கூடாது என்பதற்காக, முகமூடி அணிந்தபடியே வெளியில் தலை காட்டுகிறார்.
18 ஆக, 2018 - 00:00
மூன்றாம் தட்டிலேயே நிற்கும் டார்லிங் நடிகையை, இரண்டாம் தட்டில் ஏற்றி விட யாருமே முன்வரவில்லை. அதனால், சில நடிகர்களை நம்பி, ஓர் ஆண்டை விரயம் செய்த நடிகை, தற்போது, நரைமுடி தயாரிப்பாளர்கள் சிலரது, 'அன்பு'க்கு பாத்திரமாகி, அடுத்த கட்டத்துக்கு பயணிக்கத் துவங்கியுள்ளார்.
11 ஆக, 2018 - 00:00
புதுவரவு நடிகைளால் மார்க்கெட்டில் பின்தள்ளப்பட்டுள்ளார், பையா நடிகை. இருப்பினும், அவரது திறமையை பாராட்டி, சில கோலிவுட் இயக்குனர்கள் அடைக்கலம் கொடுத்துள்ளனர். அதனால், மொத்தமாக மும்பைக்கு ரயிலேறி விடவேண்டியது தான் என்று நினைத்திருந்த நடிகை, 'இத்தனை காலமும், 'கவர்ச்சி' நடிகையாக வலம் வந்தோம்; இனி, திறமைசாலி நடிகையாக இன்னொரு ரவுண்டு வருவோம்...' என்று கோலிவுட்டில் மீண்டும், கூடாரம் போட்டுள்ளார்.
11 ஆக, 2018 - 00:00
தன் மாமனார், அரசியலில் பிரவேசித்திருப்பதால், இனிமேல் தன்னைப் பற்றி எந்தவித கிசுகிசுக்களும் வெளியாகக்கூடாது என்று நினைக்கிறார் சுள்ளான். அதனால், படப்பிடிப்பு தளங்களில் நடிகைகளிடம் நட்பு வளர்ப்பதை குறைத்துக் கொண்டதோடு, தொடர்ந்து ஒரே நடிகையுடன், 'டூயட்' பாடுவதையும் தவிர்க்கிறார்.