கோவை மருதமலை பிலிம்ஸ் தயாரிக்கும் படம் "சிறுவாணி. சஞ்சய் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஐஸ்வரி அறிமுகமாகிறார். கதை, திரைக்கதை, எழுதி இப்படத்தை இயக்குகிறார் ரகுநாத்.
விதவிதமான காதல் பருவங்கள், அதைக் கடக்கிற இளமைப் பருவங்களைத் திரைக்கதையாக்கி இருப்பது தான் படத்தின் களம். எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா, எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட பெரிய கலைஞர்கள் உருவான, கோவை பட்சிராஜா ஸ்டுடியோவில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. 48 ஆண்டுகளுக்குப் பின் கோவையில் இப்போது "சிறுவாணி படத்தின் சூட்டிங் நடந்து வருகிறது. தேவா இசையமைக்க, கதை, திரைக்கதை, எழுதி, தயாரிக்கவும் செய்கிறார் ரகுநாத்.