ஒரு கல்லூரியில் நடைபெறும் சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள படம், "விருதுநகர் சந்திப்பு". புதுமுகங்கள் சந்துரு, கேரள அழகி தென்னா ஆகிய இருவரும் ஹீரோ, ஹீரோயினாக நடிக்க, பழம்பெரும் நடிகை கே.ஆர்.விஜயா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். விருதுநகரை சேர்ந்த ராஜானந்த் வில்லனாக அறிமுகம் ஆகிறார். இவர்களுடன் பொன்னம்பலம், முத்துக்காளை, காதல் சுகுமார், நெல்லை சிவா, ரிஷா ஆகியோரும் நடித்துள்ளனர். சஞ்சய் நிவாஸ் ஒளிப்பதிவு செய்ய, கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, இயக்கம், தயாரிப்பு எல்லாவற்றையும் கவனித்து இருக்கிறார் வி.எஸ்.டி.ரெங்கராஜன். ஏ.ஆர்.பி. புரொடக்ஷன்ஸ் சார்பில் படம் தயாராகிறது. சென்னை, விருதுநகர், திருமங்கலம், சோழவந்தான் ஆகிய இடங்களில் இப்படத்தின் சூட்டிங் நடந்து முடிந்துள்ளது. விரைவில் திரைக்கு வர இருக்கிறது.