ரஜினியுடன் இணைந்து நடனமாடும் அனிரூத்? | தக் லைப் படத்தின் புதிய அப்டேட் | ரஜினியின் வாழ்க்கை வரலாற்று படத்தை தயாரிக்கும் பாலிவுட் தயாரிப்பாளர்? | ரஜினியின் ‛கூலி' படத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | 'ஒளியை உணர்கிறேன்' : பிரேக்-அப்பிற்குப் பிறகு ஸ்ருதிஹாசன் | தீனா ரீ-ரிலீஸ் : தியேட்டருக்குள் பட்டாசு வெடித்த அஜித் ரசிகர்கள் | கரு முட்டையை பாதுகாத்து வைத்த நடிகை மெஹ்ரின் | அஜித் பிறந்தநாள் - அப்டேட் ஏதாவது வருமா ? | போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் |
ஒரு சிறிய இடைவெளிக்குப்பின் நயன்தாரா மீண்டும் மலையாளத்தில் 'லவ் ஆக்சன் டிராமா' என்கிற படத்தில் நடிக்கவுள்ளார். நிவின்பாலி ஹீரோவாக நடிக்கும் இந்தப்படத்தை மலையாள இளம் முன்னணி இயக்குனர் வினீத் சீனிவாசனின் தம்பி தயன் சீனிவாசன் இயக்குகிறார். நடிகரான இவர், தற்போது இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக மாறுகிறார்.
ஏப்ரல் மாதம் துவங்குவதாக இருந்த இந்தப்படம் நிவின்பாலிக்கு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தற்போது துவங்க இருக்கிறது. படப்பிடிப்பு இன்னும் துவங்காத நிலையிலேயே இந்தப்படத்தின் சாட்டிலைட் உரிமையை மிகப்பெரிய தொகைக்கு இப்போதே கைப்பற்றியுள்ளது பிரபல ஆசியாநெட் சேனல்.
இந்தப்படத்தின் தொண்ணூறு சதவீத படப்பிடிப்பு சென்னையில் தான் நடைபெறவுள்ளதாம். மீதி காட்சிகள் மட்டும் கேரளாவில் படமாகின்றதாம். நிவின் - தயன் - வினீத் சீனிவாசன் கூட்டணியில் எப்போதுமே முக்கியமான ஆளாக கருதப்படும் அஜூ வர்கீஸ், இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதுடன் இந்தப்படத்தையும் தயாரிக்கிறார்.