‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
காஜல் அகர்வால், நித்யாமேனன், ரெஜினா, ஈஷா, பிரியதர்ஷி என பல நடிகைகள் இணைந்து நடித்துள்ள தெலுங்கு படம் அவே. பிரசாந்த் வர்மா இயக்கியுள்ள இந்த படம் பிப்ரவரி 16-ந்தேதி திரைக்கு வருகிறது. நானி தயாரித்துள்ள இந்த படத்திற்கு தணிக்கை வாரியம் யுஏ சான்றிதழ் அளித்துள்ளது.
இந்த படத்தில் நானி நடிக்கவில்லை என்றபோதும் படத்தில் தனது பங்களிப்பை ஏதேனும் இருக்க வேண்டும் என்பதற்காக மீன் தொட்டிக்குள் வாழும் ஒரு மீனுக்கு அவர் டப்பிங் கொடுத்துள்ளார். அதேபோல் நடிகர் ரவிதேஜா இந்த படத்தில் ஒரு கேரக்டராக சித்தரிக்கப்பட்டுள்ள பொன்சாய் மரத்திற்கு குரல் கொடுத்துள்ளார். ஆக, ஐந்து கதாநாயகிகள் நடித்துள்ள இந்த படத்தில் இரண்டு முன்னணி நடிகர்கள் டப்பிங் குரல் கொடுத்துள்ளனர்.