‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
ஜெயம்ரவி நடித்த ஜெயம் படத்தில் வில்லனாக நடித்தவர் தெலுங்கு நடிகர் கோபிசந்த். அதன்பிறகு தெலுங்கிலும் சில படங்களில் வில்லனாக நடித்த அவர், பின்னர் ஹீரோவாகி விட்டார். அந்த வகையில் பல ஆக்சன் படங்களில் நடித்து ஹிட் பட நடிகராக தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் கோபிசந்த், நடிக்கும் 25வது படத்தின் பூஜை நேற்று ஐதராபாத்திலுள்ள ராமாநாயுடு ஸ்டுடியோவில் நடந்தது.
தற்போது ஜோதிகிருஷ்ணா இயக்கத்தில் ஆக்சிஜன் என்ற படத்தில் ஆக்சன் கதையில் நடித்துள்ளார் கோபிசந்த். அந்த படம் டிசம்பரில் திரைக்கு வருகிறது. அதையடுத்து, கே.சக்ரவர்த்தி இயக்கும் தனது 25வது படத்தில் சமூகத்துக்கு மெசேஜ் சொல்லும் ஒரு கதையில் நடிக்கிறார் கோபிசந்த். இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. கோபி ஜோந்த் ஜோடியாக மெஹ்ரின் நடிக்கிறார்.