‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
கடந்த வருடம் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற படம் மோகன்லால் நடித்த 'புலி முருகன்'. இந்தப்படம் கேரளாவில் மட்டுமல்லாது வெளிநாடுகளில் ஏற்கனவே நிகழ்த்தப்பட்ட சில வசூல் சாதனைகளை முறியடித்ததோடு, சில புதிய சாதனைகளை படைக்கவும் செய்தது. இந்தப்படத்தின் வெற்றியை அத்துடன் நிறுத்திவிடாமல் இதை அடுத்த தளத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்த படத்தின் தயாரிப்பாளர், இந்தப்படத்தை தமிழில், அதிலும் 3டியில் வெளியிட்டார்..
ஆனால் கேரள ரசிகர்களுக்கு இந்தப்படத்தை மீண்டும் 3டியில் காண வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காக இன்று முதல் புலி முருகன் படத்தை அங்கேயும் 3டியில் வெளியிட்டுள்ளார்கள். இதுவரை புலி முருகன் படத்தை ஒரு தடவையேனும் பார்க்காதவர்களுக்கும், இந்தப்படத்தை மீண்டும் 3டியில் பார்த்து ரசிக்க விரும்புவர்களுக்கும் புலி முருகன் படம் புதிய அனுபவத்தை தரும் என்கிறார்கள் தயாரிப்பாளர் தரப்பினர்.