போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் விவேகம் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அண்மையில் செர்பியாவில் முடிந்தது.
சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் அஜித்துடன் இணைந்து நடித்திருக்கின்றனர். அனிருத் இசையமைத்துள்ளார். தற்போது இறுதிக்கட்டப் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் ஒவ்வொரு படத்தின் ஷூட்டிங்கை முடித்ததும் படம் ரிலீஸாவதற்கு முன்னர் திருப்பதி கோவிலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார் அஜித். அந்த வகையில் சில தினங்களுக்கு படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்பிய அஜித், திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார். கோவிலில் ஆங்காங்கே ரசிகர்கள் அவருடன் கை குலுக்கியும் போட்டோ எடுத்து கொள்ள விரும்பினர். அவர்களுக்கு எந்த எதிர்ப்பும் சொல்லாமல் சகஜமாக போட்டோ எடுத்து கொண்டார்.