குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் | ரஜினியுடன் இணைந்து நடனமாடும் அனிரூத்? | தக் லைப் படத்தின் புதிய அப்டேட் | ரஜினியின் வாழ்க்கை வரலாற்று படத்தை தயாரிக்கும் பாலிவுட் தயாரிப்பாளர்? | ரஜினியின் ‛கூலி' படத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | 'ஒளியை உணர்கிறேன்' : பிரேக்-அப்பிற்குப் பிறகு ஸ்ருதிஹாசன் | தீனா ரீ-ரிலீஸ் : தியேட்டருக்குள் பட்டாசு வெடித்த அஜித் ரசிகர்கள் | கரு முட்டையை பாதுகாத்து வைத்த நடிகை மெஹ்ரின் | அஜித் பிறந்தநாள் - அப்டேட் ஏதாவது வருமா ? |
பாபநாசம் படத்தில் கமலின் மூத்த மகளாக நடித்தவர் நிவேதா தாமஸ். அதோடு போராளி, ஜில்லா, நவீன திருவிளையாடல் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார் என்றாலும், தமிழில் எதிர்பார்த்தபடி நிவேதா தாமஸ்க்கு படங்கள் கிடைக்கவில்லை. அதனால் தெலுங்கு சினிமா பக்கம் ஒதுங்கிய அவர், இப்போது அங்கு பிசியான நடிகையாகி வருகிறார்.
அந்தவகையில், தெலுங்கில் நானி நடித்த ஜென்டில்மேல் தான் நிவேதாவுக்கு முதல் படம். அந்த படம் ஹிட்டடித்ததால் மீண்டும் நானியுடன் நின்னு கோரி படத்திலும் இணைந்தார். அந்த படமும் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெறவே இப்போது நானி அடுத்தபடியாக நடிக்கும் புதிய படத்திற்கும் நிவேதா தாமஸ் நாயகியாக ஒப்பந்தமாகியிருக்கிறார். ஆக, மூன்றாவது முறையாக நானியுடன் இணைந்திருக்கிறார் நிவேதா.
அதோடு, நின்னுகோரியில் நடித்து வந்தபோதே ஜூனியர் என்டிஆரின், லவகுசா என்ற படத்திலும் கமிட்டாகி நடித்து வருகிறார் நிவேதா. அந்த படம் செப்டம்பர் 21-ந்தேதி ரிலீசாகிறது. இந்நிலையில், நின்னுகோரி மெகா ஹிட் என்பதால் தற்போது பல டைரக்டர்கள் நிவேதா தாமஸிடம் கதை சொல்லி வருகிறார்களாம். ஆக, தெலுங்கில் இரண்டு தொடர் ஹிட் கொடுத்து வேகமாக வளரத்தொடங்கியிருக்கிறார் நிவேதா தாமஸ்.