ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
கடந்த மாதம் 2016ஆம் வருடத்திற்கான அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளில் மலையாள திரையுலகிற்கு 7 விருதுகள் கிடைத்துள்ளன. இதில் சிறந்த நடிகருக்கான ஸ்பெஷல் ஜூரி விருது மோகன்லாலுக்கு அறிவிக்கப்பட்டது. மலையாளத்தில் வெளியான புலி முருகன், முந்திரி வல்லிகள் தளிர்க்கும்போல் மற்றும் தெலுங்கில் அவர் நடித்த ஜனதா கேரேஜ் ஆகிய படங்களில் சிறந்த நடிப்பை வழங்கியதற்காக அவருக்கு இந்த ஸ்பெஷல் ஜூரி விருது அறிவிக்கப்பட்டது..
நேற்று தலைநகர் டெல்லியில் தேசிய விருதுபெற்றவர்களுக்கு ஜனாதிபதி கையால் விருதுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த விழாவில் தனது மனைவியுடன் கலந்துகொண்டார் மோகன்லால்.. மோகன்லாலுக்கு ஜனாதிபதி விருது வழங்கியபோது அரங்கமே எழுந்து நின்று கைதட்டி வாழ்த்தியது.. மோகன்லால் தேசிய விருது பெறுவது இது நான்காவது முறையாகும்.