மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோன் பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா படத்தின் வாயிலாக டோலிவுட்டில் என்ட்ரி கொடுக்கவுள்ளாராம். கௌதமிபுத்ர சடர்கனி படத்தின் வெற்றிக்கு பின்னர் இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிக்கவுள்ளார். பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விரைவில் வெளிவரவிருக்கும் ரோக் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் அவர் தற்போது பிசியாக இருக்கின்றார். ரோக் படத்தின் வெளியீட்டிற்கு பின்னர் பூரி ஜெகன்நாத் பாலகிருஷ்ணா நடிக்கும் ஆக்ஷன் படத்தின் பணிகளை துவங்கவிருக்கின்றார். இப்படத்தில் பாலிவுட்டின் கவர்ச்சிப்புயல் நடிகை சன்னிலியோனை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருகின்றதாம். ரோக் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் சன்னிலியோன் பங்கேற்று நடனம் ஆடினார். பாலகிருஷ்ணா பட வாய்ப்பை கூறிய சன்னிலியோனை பாடல் வெளியீட்டு விழாவில் பூரி ஜெகன்நாத் பங்கேற்கச் செய்ததாகவும் டோலிவுட்டில் தகவல்கள் உலா வருகின்றன.