ஊழல் அரசியல்வாதிகளை தட்டிக் கேட்கும் ‛ஜனநாயகன்' | ஆபாச வெப் சீரிஸ் : 25 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை | ‛விஸ்வாம்பரா' படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மவுனி ராய் | கதையில் சமரசம் செய்யாத ராஜமவுலி : பிருத்விராஜ் வெளியிட்ட தகவல் | டியூட் படத்தில் சிவகார்த்திகேயனா? வைரலாகும் வீடியோ | கூலி படத்தில் கமலா... : லோகேஷ் கனகராஜ் அளித்த பதில் | தற்கொலைக்கு முயற்சித்தாரா ‛டிக் டாக்' இலக்கியா... : ஸ்டன்ட் இயக்குனர் மீது குற்றச்சாட்டு | மீண்டும் இசையில் கவனம் செலுத்தப் போகிறேன்: விஜய் ஆண்டனி | மீண்டும் ‛அந்த 7 நாட்கள்' படத்தில் நடிக்கும் கே.பாக்யராஜ் | பிளாஷ்பேக் : ஒரே தமிழ் படத்தில் நடித்த வங்காள நடிகர் |
தியேட்டர்களில் நமது தேசிய கீதம் கட்டாயம் ஒலிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு ஆதரவு, எதிர்ப்பு என கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த இருதரப்பினருக்கும் தேசிய கீதத்தை மதிப்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்றாலும், அதை தியேட்டரில் ஒலிக்க செய்ய வேண்டும் என்பதில் முரண்படுகின்றனர். தேசிய கீதத்துக்கு அவமரியாதை ஏற்படும் வகையில் சில சங்கடங்கள் நேர்ந்தால் அதனால் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படும் என்றும் கூறி வருகின்றனர்.
ஆனால் மலையாள இயக்குனரும் இளம் நடிகருமான வினீத் சீனிவாசனும் தியேட்டர்களில் தேசியகீதம் ஒளிபரப்ப வேண்டாம் என்கிற கருத்தை வேறு ஒரு கோணத்தில் முன் வைத்துள்ளார். அதாவது தியேட்டர்களில் தேசிய கீதம் ஒலிபரப்புவது படத்தை பாதிக்கும் என்கிறார். காரணம் ஒரு படத்திற்கு நீளம் என்பது அத்தியாவசியம், ஆனால் உள்ளே வரும் ரசிகனுக்கு தேசிய கீதத்துடன் சேர்ந்து படத்தின் நீளம் அதிகமாக தெரிவது போல உணர்வு ஏற்பட்டால் அது படத்தின் வசூலையும் வரவேற்பையும் பாதிக்கும் என்கிற விதமாக கருத்து கூறியுள்ளார்.