'பிளாக்மெயில்' புதுவித அனுபவமாக அமைந்தது : தேஜூ அஸ்வினி | 3 நாயகிகள் இணையும் 'தி வைவ்ஸ்' | வேலு பிரபாகரனின் கடைசி படம் | பிளாஷ்பேக் : 450 படங்களுக்கு இசை அமைத்த டப்பிங் கலைஞர் | பிளாஷ்பேக் : சிங்கள சினிமாவின் ஆஸ்தான இசை அமைப்பாளர் | ஆக்ஷன் படங்கள் பண்ண ஆசை : திரிப்தி திம்ரி | திலீப் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடும் மோகன்லால் | 100 கோடி வசூலைக் கடந்த 'சாயரா' | இப்போதே ரூ.25 கோடி அள்ளிய 'ஹரிஹர வீரமல்லு' | சாய் அபயங்கர் இசையமைத்த முதல் டீசர் 'கருப்பு' : ரசிகர்கள் எதிர்பார்ப்பு |
டோலிவுட்டின் யங் டைகர் ஜூனியர் என்.டி.ஆர், ஜனதா கேரேஜ் படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிக்கவிருக்கும் அவரது 27வது படம் குறித்த அறிவிப்புகள் தற்போது வெளிவந்துள்ளன. ஜூனியர் என்.டி.ஆரின் சகோதரரும் நடிகருமான கல்யாண் ராம் ஜூனியர் என்.டி.ஆரின் 27வது படத்தை தயாரிப்பதாகவும் இயக்குனர் பாபி இப்படத்தை இயக்கவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடிக்கவிருக்கும் நாயகிக்கான தேர்வு நடைபெற்று வரும் நிலையில் இப்படத்திற்கு கொலவெறி புகழ் இளம் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் பரவியுள்ளது. அனிருத் இசையமைப்பில் வேலையில்லா பட்டதாரி, ரெமோ போன்ற படங்கள் தெலுங்கில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டு டோலிவுட் ரசிகர்களை கவர்ந்துள்ளது. நேரடி தெலுங்கு படத்திற்கு பலமுறை பேசப்பட்டு வந்த அனிருத் இம்முறை உறுதியாக ஜூனியர் என்.டி.ஆர் படத்தின் வாயிலாக டோலிவுட்டில் தடம் பதிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.