'பிளாக்மெயில்' புதுவித அனுபவமாக அமைந்தது : தேஜூ அஸ்வினி | 3 நாயகிகள் இணையும் 'தி வைவ்ஸ்' | வேலு பிரபாகரனின் கடைசி படம் | பிளாஷ்பேக் : 450 படங்களுக்கு இசை அமைத்த டப்பிங் கலைஞர் | பிளாஷ்பேக் : சிங்கள சினிமாவின் ஆஸ்தான இசை அமைப்பாளர் | ஆக்ஷன் படங்கள் பண்ண ஆசை : திரிப்தி திம்ரி | திலீப் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடும் மோகன்லால் | 100 கோடி வசூலைக் கடந்த 'சாயரா' | இப்போதே ரூ.25 கோடி அள்ளிய 'ஹரிஹர வீரமல்லு' | சாய் அபயங்கர் இசையமைத்த முதல் டீசர் 'கருப்பு' : ரசிகர்கள் எதிர்பார்ப்பு |
டோலிவுட்டின் மெகாஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ராம் சரணும் தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகராக வளர்ந்து வருகின்றார். ப்ரூஸ் லீ போன்ற தொடர் தோல்வி படங்களால் துவண்டிருந்த ராம் சரணுக்கு அண்மையில் திரைக்கு வந்த துருவா மிகப்பெரிய வெற்றியை அளித்துள்ளது. தமிழில் சூப்பர் ஹிட்டான தனி ஒருவன் படத்தின் தெலுங்கு ரீமேக்கான துருவா படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத்தி சிங் நடித்துள்ளார். இயக்குனர் சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில், அல்லு அரவிந்தின் கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்த துருவா திரைப்படம் டிசம்பர் 9ல் திரைக்கு வந்தது. மூன்று நாள் வசூலில் டாலர் 1 மில்லியன் கிளப்பில் இணைந்த துருவா ராம் சரண் படங்களில், முதல் மூன்று நாட்களில் அதிக வசூல் ஈட்டிய படங்களில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இதனால் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ள ராம் சரண் இயக்குனர் சுரேந்தர் ரெட்டியை அழைத்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளாராம்.