தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் |
தேவையில்லாமல் எதையாவது பேசி, வம்பை விலைகொடுத்து வாங்குவதில் சர்ச்சை நாயகன் இயக்குனர் ராம்கோபால் வர்மாவை மிஞ்ச ஆளில்லை. முன் தெலுங்கு மெகாஸ்டார் சிரஞ்சீவியின் 15௦வது படத்தை சிரஞ்சீவியே இயக்கினால், அது நிச்சயம் அவரது முந்தைய கண்டுபிடிப்பான பிரஜா ராஜ்ஜியம் கட்சியை விட மோசமாக இருந்துவிடாது என்று நம்பலாம்” என அவரை மோசமாக விமர்சித்தார். அடுத்ததாக 'ஓ காதல் கண்மணி' படத்தில் நடித்த துல்கர் சல்மானின் நடிப்பை புகழ்கிறேன் என அவரைத் தந்தை மம்முட்டியை விமர்சித்தார்.
சமீபத்தில் கூட 'கபாலி' படத்தில் ரஜினியை பற்றி அட்டாக் செய்து ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொண்டார். ஆசிரியர் தினத்தன்று ஆசிரியர்கள் பற்றி விமர்சித்து வம்பில் சிக்கியிருக்கிறார். அடுத்தப்படியாக இப்போது, மலையாள இயக்குனர் பிரியதர்ஷனை வம்புக்கு இழுத்துள்ளார்... திடீரென பிரியதர்ஷனை வம்பிழுக்க காரணம் என்ன..? மோகன்லால் நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கியுள்ள 'ஒப்பம்' படம் வரும் ஓணம் பண்டிகை ரிலீஸாக நாளை மறுநாள் வெளியாக இருக்கிறது.. இந்தப்படத்தின் ட்ரெய்லரை பார்த்துவிட்டு, ட்ரெய்லர் நன்றாக இருக்கிறது.. குறிப்பாக ஹாலிவுட்டில் உருவான 'டேக்கன்' படத்தை விட இது நன்றாக இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்..
பாராட்டித்தானே இருக்கிறார்.. இதில் வம்புக்கு எங்கே இடம் இருக்கிறது என நீங்கள் நினைக்கலாம். ராம்கோபால் வர்மாவை பொறுத்தவரை இந்தப்படம் ஹாலிவுட்டில் வெளியான 'டேக்கன்' படத்தின் தழுவல் என கருதுகிறார்.. ஆனால் இயக்குனர் பிரியதர்ஷனோ இது தான் சொந்தமாக உருவாக்கிய கதை என்றும் எந்தப்படத்தின் தழுவலும் இல்லை என எப்போதோ கூறிவிட்டார். அப்படி சொன்னவரை பார்த்து இந்தப்படம் தழுவல் என்றால் பின்னே வம்பில்லாமல் என்னவாம்..?
இன்னொரு ரகசியம் தெரியுமா..? மூன்று வருடங்களுக்கு மும் மேஜர் ரவி இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான 'கர்மயோதா' படம் 'டேக்கன்' படத்தை தழுவித்தான் எடுக்கப்பட்டிருந்தது.. இப்போதுவரை ராம்கோபால் வர்மாவுக்கு இந்த விஷயம் தெரியாதா என கிண்டலடிக்கிறார்கள் சில மலையாள இயக்குனர்கள்.