மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தமிழில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த தனி ஒருவன் படம் தெலுங்கில் துருவா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றது. ஜெயம் ரவி வேடத்தில் ராம் சரண் நடிக்கும் இப்படத்தை இயக்குனர் சுரேந்தர் ரெட்டி இயக்குகின்றார். ரகுல் ப்ரீத்தி சிங் நாயகியாக இப்படத்தில் நடிக்கின்றார். கீதா ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் தயாரிக்கும் துருவா படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்து ரசிகர்களைக் கவர்ந்துள்ள நிலையில் துருவா படத்தின் டீசர் செப்டமபர் 5ல் வரும் விநாயக சதுர்த்தி அன்று வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தூஃபன் படத்திற்கு பின்னர் மீண்டும் ராம் சரண் காக்கி சட்டை அணிந்து நடித்துள்ள துருவா படத்தின் படப்பிடிப்புகள் செப்டம்பர் முதல் வாரத்தில் நிறைவடையும் என கூறப்படுகின்றது. அக்டோபர் 7ல் துருவா படத்தை திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளது. தனி ஒருவன் படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹிப்பாப் தமிழா ஆதி இப்படத்திற்கும் இசையக்கின்றார். இப்படத்திலும் அரவிந்த் சாமி வில்லனாக நடிக்கின்றார்.