‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
மலையாள சூப்பட் ஹிட் திரைப்படமான ப்ரேமம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வரும் நாகசைதன்யா அடுத்ததாக பஞ்சாபி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க திட்டமிட்டுள்ளார். தில்ஜிட் மற்றும் நீரு பாஜ்வா நடிப்பில் 2012ல் வெளிவந்த ஜடட் அண்ட் ஜூலியட் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. அதே போல் அப்படத்தின் இரண்டாம் பாகம் 2013ல் திரைக்கு வந்து வெற்றி பெற்றது. இவ்விரு படங்களையும் பார்த்த நாகசைதன்யா அப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க முடிவு செய்துள்ளார்.
இயக்குனர் கௌதம் மேனன் இயக்கிய அச்சம் என்பது மடமையடா படத்தின் தெலுங்கு பதிப்பில் நடித்துள்ள நாகசைதன்யா அப்படம் ஆகஸ்டில் திரைக்கு வரும் என கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து ப்ரேமம் தெலுங்கு ரீமேக் செப்டம்பரில் வெளிவரும் என கூறப்படுகின்றது. இவ்விரு படங்களுக்கு பின்னர் இயக்குனர் கல்யாண் கிருஷ்ணா இயக்கும் படத்தில் நாகசைதன்யா நடிகக்விருப்பதாகக் கூறப்பட்டது. கல்யாண் கிருஷ்ணா படத்துடன் ஜடட் அண்ட் ஜூலியட் படத்தின் ரீகேக்கையும் துவங்க நாகசைதன்யா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.