ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் |
டோலிவுட்டின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் குடும்பத்திலிருந்து ராம் சரண், வருண் தேஜ், சாய் தரண் தேஜ், பல இளைய தலைமுறை நடிகர்கள் வெள்ளிதிரைக்கு வந்து விட்டனர். மெகா குடும்பத்திலிருந்து திரைக்கு வந்த முதல் நடிகை நிஹாரிகா. நிஹாரிகா நடிப்பில் ஒக்க மனசு திரைப்படம் அண்மையில் திரைக்கு வந்தது. ஒக்க மனசு திரைப்படம் தோல்வியைத் தழுவிய போதிலும் நிஹாரிகாவின் நடிப்பு மற்றும் நடனத்திற்கு பாராட்டுகளே கிடைத்தது. இதனால் தனது அடுத்த படத்திற்கு நிஹாரிகா கதை கேட்டு வருகின்றார்.
ஹாப்பி ஜர்னி எனும் மராத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க நிஹாரிகா நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம். சகோதர பாசத்தை மையமாக்க கொண்ட ஹாப்பி ஜர்னி எனும் திகில் படத்தில் ஹர்சவர்தன ரானே முதன்மை வேடத்தில் நடிக்கின்றார். தயாரிப்பாளர் வேணுகோபால் இப்படத்தை தயாரிக்கவுள்ளார். விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவரும் என கூறப்படுகின்றது.